ஜனநாயகத்துக்கு வெளியே
Courtesy: jrs.net
இலங்கையில் 1983 முதல் ஏற்பட்ட கலவரம், போர் காரணமாக, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் தொடர்ச்சி என 2012வரை நான்கு கட்டங்களாகத் தமிழகத்துக்கு அகதிகள், நாடற்றவர்கள் என மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்றிருக்கிறார்கள். இப்படிச் சென்றவர்களில் தற்போது 106 முகாம்களில் 57,391 நபர்களும், முகாமிற்கு வெளியே 33,783 நபர்களும் (2023) நாற்பதாண்டுகளைக் கடந்து வாழ்கிறார்கள். இவர்களை இந்திய ஒன்றிய அரசு சட்டவிரோதக் குடியேறிகள் என்ற காரணத்தை முன்வைத்துக் குடியுரிமை வழங்க மறுக்கிறது. இப்படி நாற்பதாண்டுக் காலம் தமிழ்நாட்டில் வாழும் நிலையில் இந்த மக்களுக்கான அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும்? தமிழ்நாட்டின் புறச்சூழல்கள் அனைத்தாலும் உள் வாங்கப்பட்டவர்களுக்கு