யார் காரணம்?
ஓவியம்: வர்ஷா கராதமால்
யார் காரணம்?
இரவின் இருட்டைப் பயம் என்று பெயரிட்டால்,
அதில் துப்பட்டா போடாமல் நடக்கும் பெண்ணை
திடம் என்று அழைப்போமா?
திடத்திற்கு இடம் உண்டா?
இடம் இல்லாதவள் போல் நடந்துகொண்டே பிறந்தாளா?
தீவிரத்திற்கு அபாயம் தூரத்துச் சொந்தமா?
அல்லது
அவளை
விவரம்கெட்டவள் என்று கூந்தலுக்குப் பின்னேயோ
அல்லது வளைத்தளத்தின் இடைவெளிகளுக்குள்ளேயோ
ஒளிந்து, அவள் முகத்தில் துப்புவார்களா?
அவள் பெற்றோரிடம் கோள் மூட்டிவிடுவார்களா?
கலாச்சாரம் இடிந்து விழுகிறது, வங்கக் கடலை ஒட்டி
சுனாமி வருகிறது, இதற்கெல்லாம் மதிப்புக்குரியோர் முன்பு
தனது சுலபத்திற்