காகிதம் இறகு கொஞ்சம் மை
விஜய நகரம்
(உலக கிளாசிக் நாவல்)
சல்மான் ருஷ்டி
தமிழில்: ஆர். சிவகுமார்
ரூ.580
காலச்சுவடு ஜூலை வெளியீடாக வரவிருக்கும் ‘விஜய நகரம்’ நாவலிலிருந்து ஒரு பகுதி
தொடக்கத்தில் வலி மட்டும் இருந்தது; விரும்பத்தக்கதாக, மகிழ்ச்சி தரும் நிம்மதியாக மரணம் இருக்கும் என்று நினைக்கவைக்கும் அளவில் வலி. இறுதியில் அந்தக் கடுமையான வலி தணிந்தது; பிறகு நீண்ட நாட்களுக்கு அதை அவள் உணரவில்லை. இருளில் உட்கார்ந்துகொண்டு உணவு வரும்போது கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டுப் பித்தளை ஜாடியிலிருந்து சிறிது நீரைப் பருகி