கலைச் சொல்லாக்கக் கழைக்கூத்து வித்தைகள்
Courtesy: nextpit
1. சொற்களும் கலைச்சொற்களும்
வரலாற்றுக்கு முந்திய, மனித குலத்தின் தொடக்கப் புள்ளியாகிய, நம்முடைய மூதாதையர்கள் தம்மையும் தம்மைச் சுற்றியுள்ள மற்ற மனிதர்களையும் பார்த்தார்கள். மரம், செடி, கொடி, புல், பூண்டு, பறவைகள், மற்ற உயிரினங்கள், மண்ணிலும் விண்ணிலும் உள்ள அசையும் / அசையாப் பொருட்கள் ஆகிய அனைத்துப் பொருட்களையும் அவற்றில் நிகழும் மாற்றங்களையும் செயல்பாடுகளையும் கண்டார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் குறிப்பிட விரும்பினார்கள். தாங்கள் காணும், கேட்கும், சுவைக்கும், உணரும், முகரும் ஒவ்வொன்றைப் பற்றித் தோன்றிய எல்லாவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார்கள். அதற்குப் பரிமாற்றக் கருவி ஒன்று வேண்டியிருந்தது. அன்றாட எண்ணங்களையும் உணர்வுகளையும் அடிப்படைத் தே