இறுதியில் சொற்களே வெல்கின்றன
‘என்னால் ஏன் எதுவுமே செய்ய முடியாமல் போனது? என்னால் ஏன் அவனைத் தடுக்க முடியவில்லை? என்னைக் கொல்லப் பாய்ந்து வந்த வனிடம், இந்தா எடுத்துக் கொள் என்று எப்படி என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடிந்தது?
ஒரு சிறு எதிர்ப்பையும் வெளிப்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமானவனா நான்?’ வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் நீண்டுகிடக்கும் அந்த நிச்சயமற்ற பெருவெளியில் பலவிதமான கருவிகளுக்கு மத்தியில் படுத்துக்கிடந்தபோது சல்மான் ருஷ்டியைத் துளைத்தெடுத்த பல கேள்விகளுள் இவையும் அடங்கும். அந்தக் கேள்விகளையுமே என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை.
‘உன்னால் ஒன்றுமே செய்திருக்க முடியாது சல்மான்’ என்று அவரை ஆற்றுப்படுத்த முயன்றார்கள் உறவினர்களும் நண்பர்களும். உனக்கு 75 வயது என்பதை மறந்துவிட்டாயா? 75 வயது முதியவனால் கத்தியோடு துள்ளிக்கொண்ட