சு.ரா. கடிதங்கள்
கடிதங்கள் வழி துலங்கும் சித்திரம்
சுந்தர ராமசாமி தன் நண்பர் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் 2022 செப்டம்பரிலிருந்து (273வது இதழ்) காலச்சுவடில் பிரசுரித்துவருகிறோம். அக்கடிதங்களில் பலமுறை ‘க்ரியா’ பதிப்பகம் தொடர்பான குறிப்புகள் வருகின்றன. க்ரியாவின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்த சு.ரா., க்ரியாவின் செயல்பாடுகள் குறித்த தனது கருத்துகளை க்ரியா ராமகிருஷ்ணனிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தனது எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சொல்லிவந்திருக்கிறார். அவற்றுக்கான எதிர்வினைகள் சரிவரக் கிடைக்காத நிலையில் க்ரியாவிலிருந்து சு.ரா. விலகியிருக்கிறார்.
சு.ரா.வின் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் இரு வகையானவை. ஒன்று க்ரியா பதிப்பகத்தின் எழுத்தாளர் என்ற முறையிலானவை. இரண்டு, தமிழ்ச் சூழல் சார்ந்து க்ரியா ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பானவை. க்ரியா - சு.ரா. உறவின் சிக்கல்களை சு.ரா. - ராமகிருஷ்ண