மூன்று டாக்டர்கள்; மூன்று நூல்கள்
டாக்டரின் தொணதொணப்பு
எம்.கே. முருகானந்தன்
ஜீவநதி வெளியீடு
2021, அல்வாய், இலங்கை,
விலை: ரூ.400/
(இலங்கை ரூபாய்)
2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்பகுதியில் வசிக்கும் டாக்டர் எம்.கே. முருகானந்தன் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எழுதிய ‘டாக்டரின் தொணதொணப்பு’ என்னும் நூலைக் கொடுத்தார். அவரை அப்போதுதான் முதலில் சந்தித்தேன்.