தேவைகளின் பொருட்டாக . . .
சில கனவுகள் அரைத் தூக்கத்திலேயே உருவாகி வருபவை எனக் கருதுகிறேன். அவை வெம்மை
தகிக்கும் நிலங்களில் கரிந்து போகாமலும் பனிப் பொழிவுப் பிரதேசங்களில் உறைந்து
போகாமலும் அனாந்தரமாகச் சுற்றிக்கொண்டிருப்பவை. அந்தக் கனவின் மூலப்பொருளும் முதல்
ஆயுதமுமாக இருப்பது பேனாதானே? ஆமாம், பேனாதான். பேனாவின் குரல் யாரோ ஒருவருக்கான
நீதி தேடி ஒலிப்பதில்லை. அது சமூகத்தின் குரலாக ஒலிப்பதால், சமூக நீதியைத் தேடுவதால்
அந்தக் குரல் மாத்திரமே மகிமைகொண்டதாக இருக்கிறது. இப்படியான குரல் காலச்சுவடுக்கு
உரியது. அநேகமாகக் கடந்த இருபதாண்டுச் சமூகம் சூழலில் ஒரு மாற்றத்தை, முன்னோடியாக
இருந்து உருவாக்கியதில் காலச்சுவடு முதன்மைப் பங்கு வகிக்கிறது.
1983இல் நான் எழுத வந்தபோது காலச்சுவடு இல்லை. அப்போதிருந்த இலக்கிய இதழ்கள், இலக்கிய இதழ்களாகவே இருந்தன. ஆனால் காலச்சுவடு தோன்றியபின் அட