குற்றவாளிக் கூண்டில் ஐநா
அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைகளாலும் ரசாயன ஆயுதங்களாலும் வியட்நாம்
சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் வியட்நாம் மக்களுக்கு உதவுவதற்காக
ஆஸ்திரேலியக் குடிமகளான ஒரு பெண்மணி அங்குச் சென்றார். அவருக்கும் அவர் சார்ந்த ஒரு
தொண்டு நிறுவனத்துக்கும் சில புள்ளி விவரங்கள் தேவைப்பட்டன. பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவுவதற்கு அவசியம் தேவைப்பட்ட அந்தப் புள்ளி விவரங்கள் போதுமான அளவுக்கு
எங்கிருந்தும் அப்போது அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
1986இல் இலங்கை ராணுவத்தால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அதே ஆஸ்திரேலியப் பெண்மணி இலங்கைக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. ஒரு கிராம அலுவலரை அணுகினால்கூடப் போதும் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் படியான நிலைமை அங்கு இருந்தது. “மக்கள் தொடர்பிலான