மெக்காலே கல்விமுறையின் சாதகமான கூறுகள்
மெக்காலே பிரபு பேசியதாக ஒரு போலியான மேற்கோள் பற்றி ‘திறந்தவெளி’ காலச்சுவடு 154இல் நான் எழுதியிருந்தேன். காலச்சுவடு 155இல் ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனின் எதிர்வினையில், நம்முடைய அந்நாளைய மரபுவழிக் கல்வி ‘அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பரந்த, விரிவான ஒரு முழுமையான கல்வியறிவை வழங்கவில்லை’ என்று நான் எழுதியிருந்ததை மறுத்து, தரம்பாலின் The Beautiful Tree என்னும் நூல் அந்தக் காலகட்டத்தின் மரபுவழிக் கல்வி பற்றி மிகத் தெளிவாக விவரித்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, 1826இலேயே சென்னை மாகாணத்தில் மரபுவழி மாணவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் எட்டு விழுக்காடு இருந்தது என்பதையும் பிரிட்டீஸாரின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதையும் சுட்டிக் காட்டியதோடு, அன்றிருந்த பள்ளிகள் முக்கியமாக எண்ணும் எழுத்தும் கற்பித்தன என்பதையும் தெரிவித்து, அத்தகைய முக்கியமான நூலை நான் அறியாதிருப்பது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். அந்த உயர்ந்த நூலை அதுவரை நான் படித்ததில்லை என்பதையும் அவர் எதிர்வினைக்குப் பிறகே அந்த நூலைப்