ஆம்ப்ளிபயரும் முன்னிரவுப் பாவை நோன்புப் பாடல்களும்
தமிழின் நவீன இலக்கியத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத்தான் இஸ்லாமியச் சமுதாயம்
படைப்பெழுத்தின் வழி இடம்பெற்றுவருகிறது. அதிலும் இஸ்லாமிய எழுத்தாளர்களே தங்கள்
சமுதாயம் தொடர்பாக எழுதுவது வரவேற்கப்பட வேண்டியது. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி
உலகங்களைத் தமிழ் வாசகர்களுக்குக் காட்டுகிறார்கள். இந்த வகையில் தற்போது தீவிரமாகப்
படைப்பெழுத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர் கீரனூர் ஜாகீர் ராஜா. இவருடைய
மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி, வடக்கே முறி அலிமா நாவல்களும்
தேய்பிறை இரவுகளின் கதைகள் சிறுகதைத் தொகுப்பும் தமிழ் வாசகர்களிடையே பரவலான கவனம்
பெற்றவை. மீன்காரத் தெருவின் தொடர்ச்சி மீன் குகைவாசிகள் நாவல். தோப்பில் முகம்மது
மீரான், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன் போன்ற மூத்த தமிழ்
எழுத்தாளர்களும் இவர் பற்றிய தங்கள் சிலாகிப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். பல
விருதுகளையும் பெற்றுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் தகுதியானவர்தான் ஜாகீர் ராஜா. இது
தமிழ்ச் சூழலின் ஆரோக்கியமான போக்கும்கூட. நூல் வடிவில் வெளிவந்துள்ள இவரது அத்தனை
படைப்புகளையும் படிக்கும் வாய்ப்பு எ