வெண்ணிலைக் கடிதம்
பொதுவாகச் சோழர் காலக் கல்வெட்டுகள் பெரும்பாலானவற்றில் சம்மந்தப்பட்ட கொடையினை
“கல்லிலும் செம்பிலும் பொறித்திருப்பதாக” ஒரு வரி இடம்பெற்றிருக்கும். சிலாசாசனம்
என்றும் தாம்ர சாசனம் என்றும் இவை குறிப்பிடப்படுவதுண்டு. ஆவணங்கள் அனைத்துமே
கல்லில் மட்டுமின்றிச் செம்பிலும் பொறித்து வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் மரபு
உண்டு. இது முழுமையான உண்மையா என்று தெரியாவிட்டாலும்கூட, பல கல்வெட்டுச் செய்திகள்
செப்பேடுகள் மூலமும் அறியப்படுகின்றன என்பதும் உண்மையே. இதை அடிப்படையாகக் கொண்டால்
வெண்ணிலாவின் கூற்றுப்படி அனைத்து சாசனங்களுமே பிராமணர்களுக்கு
வழங்கப்பட்டதாகிவிடும்.
முதல் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் நரலோகவீரன் என்ற பட்டப்பெயர் கொண்ட மணவிற் கூத்தன் காலிங்கராயன், தேவாரப் பாடல்கள் அனைத்தையும் செப்பேட்டில் பொறித்துத் தில்லைக்கோயிலில் பாதுகாத்து வைத்தான் என்றவிவரம் சிதம்பரம் கோயில் கல்வெட்டில் (SII vol.4.pg.34) காணப்படுகிறது. அப்பாடல் இதோ:
முத்திறத்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு
ஒத்தமைந்த செப்பேட்டின் உள்ளெழுதி - இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசையெழுதினான் கூத்த