விபத்துகள் போன்ற ஆச்சர்ய நிகழ்வுகள்
காலச்சுவடு, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மதுரை
அற்றைத்திங்கள் நிகழ்வில் 14.02.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு
பேசிய எழுத்தாளர், விமர்சகர் க. பஞ்சாங்கத்தின் உரை:
காலச்சுவடு நடத்தும் இந்த மாதாந்திர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவது எனக்குள் மகிழ்ச்சியாகப் பரவுகிறது. இதற்கு இரண்டு காரணம். ஒன்று காலச்சுவடைச் சுந்தர ராமசாமி தொடங்கிய காலத்தில் இருந்தே அதனோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பு. 90களில் என்னுடைய ‘தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு’ வெளி வந்தபோது கோமல் சுவாமிநாதன் சுபமங்களா நேர்காணலில் “நான் சமீபத்தில் சந்தோசமாகப் படித்துக்கொண்டிருக்கும் நூல்” என்று கூறிய தோடு காலச்சுவடு மலரிலும் எழுதி அந்தப் புத்தகத்திற்கு உலக அளவில் ஓர் அங்கீகாரத்தை அமைத்துக் கொடுத்தார்; முகமறிந்த சிறுபத்திரிகை “நண்பர்கள்” யாரும் வாய் திறக்காத நிலையில், என் முகமறியாத சு.ரா. அந்தப் புத்தகத்தை இந்த அளவிற்கு ஏற்றுப் பேசியது, ஏற்கெனவே ஜே.ஜே.: சில குறிப்புகள் மூலம் எனக்குள் பிரமாண்டமான ஆளுமையாகப் பரவியிருந்த சு.ரா. மீது மேலும