ஐநாவின் மோசமான தோல்வி
ஒரு போரில் 50,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக/காயம்பட்டிருப்பதாக
உறுதிப்படுத்தப்படாத தகவல், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு
யுத்தகளத்திலிருந்து கிடைத்திருப்பதாக, ஐநா சபை இன்று அறிவிக்கிறது என்று
வைத்துக்கொள்வோம். உலகம் அதைக் கவனித்திருக்காதா? படுகொலையைத் தடுக்க
முனைந்திருக்காதா? இலங்கைப் போர் பற்றி 2009ஆம் ஆண்டே ஐநா அமைப்பிடம் இத்தகவல்
இருந்தது என்பது இப்போது நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதை அமுக்கிவிட்டார்கள்.
இப்போது ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒரு உள் ஆய்வுக்கு உத்தரவிட்டதால் இத்தகவல்
தெரிய வந்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரில் ஐநாவின் செயல்பாடு ‘மோசமான தோல்வி’, இனி ‘மீண்டும் அப்படி நடக்கக் கூடாது’ என்று இந்த உள் ஆய்வறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ருவாண்டாவில் ஐந