எழுச்சிபெறும் குடிமைச் சமூகம்
கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்றே மத்திய அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, மானியவிலைச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு ஆறு என்ற அளவில் குறைத்தது அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது முதலான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பங்களால் அவை நடவடிக்கைகள் முற்றாக முடங்கின. மத்திய அரசுக்கெதிராக காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முன்னாள் உறுப்புக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முன்மொழிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் போதிய ஆதரவு இல்லாததால் அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவுக்குத் தொடக்கநிலையிலிருந்தே எதிர்ப்புத் தெரிவித்துவரும் இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பலவும் மம்தாவின் அழைப்பை நிராகரித்தது இத்தோல்விக்கு முக்கியக் கார