காலம் ஆகி வந்த கதை
கதை ஒன்று
காலச்சுவடும் புலிகளும் என்ற என்னுடைய கட்டுரைக்கு சிரிப்பின் வஞ்சக அரசியல் என்ற தலைப்பில் அ. இரவி லண்டனிலிருந்து எதிர்வினை ஆற்றியிருந்தார். இரவியின் எதிர்வினைக்கான என் பதிலை அதற்குரிய முறையில் எழுதுவதற்கிருந்தேன். பதிலை எழுதுவதற்கு முன்பு, இரவி ஒரு காலம் என்னுடன் நெருங்கிப் பழகியவர் என்ற காரணத்தால் ‘நான் பதில் எழுதவுள்ளேன்’ என்பதை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். இதற்கு முன்னரும் பல இடங்களில் இரவி என்னைக் குறித்துத் தாழ்வாக எழுதியும் பேசியும் வந்ததால் முடிவாக அந்த மின்னஞ்சலை எழுதினேன். அதனையடுத்து இரவி தொலை பேசியில் தொடர்புகொண்டு அந்தப் பதிலை வேறுவிதமாக மோதல்களற்ற நிலையில் எழுதும்படியும் கேட்டார். ‘நாங்கள் நண்பர்களாகவே இருக்க வேண்டும் எனவும் எங்களுக்குள் இடைவெளி ஏற்படுவது நல்லதல்ல’ என்றும் கேட்டுக்கொண்டார். வேறு நண்பர்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை விடுத்தார். பொதுவெளியில் என்னை மோசமாகத் தாக்கிக்கொண்டு, தனிப்பட்ட முறையில் இணக்கமாகக் கதைப்பது அறிவியல் ஒழுக்கத்துக்குரியதல்ல. ஒருவரின் ஆளுமையைக் குறித்த பொது