மினுங்கும் கண்கள்
அந்தோணி ராஜ் தன் நண்பர் இம்மானுவேல் திடீரென்று இறந்த பாதிப்பிலிருந்து விடுபட இயலாதவராயிருந்தார். இருவரும் அடிக்கடி வேளாங்கன்னிக்குச் சென்றுவருவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். தனியே வேளாங்கன்னிக்குச் செல்வதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இன்று காலை இம்மானுவேலை அடக்கம் பண்ணப் போகிறார்கள். தனது சந்தோஷங்களையும் பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்வதற்கு ஆள் எவரும் இல்லை என்ற கவலை அவரைப் பீடித்திருந்தது.
‘கண்ணீர் அஞ்சலி’ என்று சுவரொட்டி அடித்து அப்பகுதியில் ஒட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அவ்வாறே ஒட்டுவதற்கும் ஏற்பாடு பண்ணினார். ‘கண்ணீர் அஞ்சலி’ என்பது ‘கன்ணீர் அஞ்சலி’ என அச்சாகிவிட்டது. அச்சகத்தில் சரியாகக் கவனித்தாற்போல்தான் அவருக்குத் தோன்றியது. அச்சகத்தில் சுவரொட்டிகளை வாங்கச் சென்றப