கூடங்குளம் அணு உலை சட்டப் போராட்டம் - கோ. சுந்தரராஜன்
அணுசக்தியை ராணுவரீதியாக மட்டுமன்றி ஆக்கபூர்வமாகவும்கூடப் பயன்படுத்தக் கூடாது
என்பதே பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் அடிப்படையான நிலைப்பாடு.
தொழில்நுட்பரீதியில் அணு சக்தி மனித குலத்துக்கு எதிரானது என உறுதியாக நம்புகிறோம்.
அணு உலை விபத்துக்கள் மட்டுமல்ல அவற்றின் ஒட்டு மொத்தச் செயல்பாடுகளுமே மனிதர்கள்,
இயற்கை, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு எதிரானது. எனவே அணு சக்தியின்
பயன்பாட்டை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எமது இயக்கத்தின் ஆழமான
நம்பிக்கை. அது உண்மையும் கூட. யுரேனியத்தின் தொடர்வினையைக் கட்டுப்படுத்தும்
தொழில்நுட்பம் இன்னும் வளர்த்தெடுக்கப்படவில்லை. அணுக்கரு பிளவு என்னும் வினை
ஒருமுறை தொடங்கப்பட்டுவிட்டால் பிறகு அதை நம்மால் ஓரளவு மட்டுப்படுத்த முடியுமே
தவிர முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. நூறு சதவிகிதம் வெற்றிகரமானதும்
பாதுகாப்பானதுமான இயந்திரம் என உலகில் எதுவும் கிடையாது. இது இயந்திரங்களின்
அடிப்படை விதி. எனவே எப்போதும் ஆபத்தை உள்ளடக்கியிருக்கும், மனித சமூகத்திற்குத்
தீங்கு விளைவிக்கக்கூடிய பாதுகாப்பற்ற இந்த அணு சக்தியை நாங்கள் எதிர்க்கி