‘உண்மையான பயணிக்குத் தான் எங்குச் செல்கிறோமென்று தெரியாது’ ழான்-மிஷேல் புலென்
பிரெஞ்சு ‘மொஸைக்’ கலைஞர் ழான் - மிஷேல் புலென் இயற்கையுடனும் மனிதர்களுடனும் மிக நெருக்கமாக வாழ்பவர். ஸ்ட்ராஸ்பூர்க் (Strasbourg) பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் படிப்பை முடித்த பின்னர், இவர் பல்வேறு நாடுகளில் பயணம் மேற்கொண்டார்.
வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடும் முயற்சியுடன் மிக நெருக்கமாகப் பிணைந்திருந்த இவருடைய நீண்ட பயணங்கள் இவரைப் பலவிதமான இடங்களுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன: கொல்கத்தா, சென்னை நகரங்களின் புறநகர்ப் பகுதிகள், பிரான்ஸின் மலைப்பகுதியான ‘சவ்வா’ பிரதேசத்தின் துறவிகளின் ஆசிரமங்கள், க்லேர்வோ சிறையில் கைதிகளின் இருப்பிடம், தென்பிரான்சின் துறைமுக நகரம் மார்சேய் (Marseille), அல்ஜீரியா கிராமமொன்றுக்கு மிக அருகிலிருந்த ஒரு பல்கலைக்கழகம் . . . . மெங்சி (Menghzi) என்ற எழுத்தாளர் ஒருவரின் சொற்களை இவர் ம