பிழைகளை உணராதது பெரும்பிழை
செப்பேடுகளில் காணப்படும் பெரும்பான்மையான சொற்களைச் அவற்றில் உள்ளவாறு அன்றிப் படிப்போருக்குப் பொருள் புரியாத புதிய வடிவங்களில் பிழையாகப் பொருத்தம் இன்றி மனம்போன போக்கில் நூல் முழுவதும் விரவிக்கிடப்பதை மிகச் சாதாரண ‘ஒற்றுப்பிழை போல’ எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. (ஒரு எடுத்துக்காட்டு இராசேந்திரன் கடார வெற்றியில் ஓரிடம் சாந்திமத் தீவு: நூலில் இதற்குரிய பெயர் ‘சந்தமட்டுவு’) மூலச் செப்பேட்டை ஒருமுறைகூடப் படிக்காமல் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏராளமான வரலாற்றுச் சொற்கள் தவறாக எழுதப்பட்டுள்ளன. பிழைகளைச் சுட்டிக்காட்டினால் உணராதது பெரும்பிழை.
வரலாற்றை இந்நூல் புதிய முறையில் அணுகியுள்ளதாம். முதலாம் இராசராசனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை இராசராசன் மகன் என்றும் பல்லவ மன்னன் நிருபதுங்கன் என்னும் அபராஜிதன் (இருவரும் ஒருவரே எனப் பொருள்படும்படி) என்றும் கூறுவதுதான் புதியமுறை வரலாறா?
‘அரசர்கள் ந