தலையங்கம்

தலையங்கம் கொரோனா இரண்டாம் அலையின் முன்னே.. மனிதர்களின் உயிர் தரிப்பு இயற்கையானது அல்ல; அவர்களுடைய தேர்வின் அடிப்படையில் அமைந்தது. கொரோனா தொற்று நோய் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்களுக்குக் கற்பிக்கும் பாடம் இது. தொற்றுநோயால் பீடிக்கப்பட்டு நாம் இறந்து போகலாம்; அது இயற்கையானது. அதை ம

அஞ்சலி

அஞ்சலி வே. ஆனைமுத்து பெரியாரியச் சிந்தனையாளர் (1925 - 2021)   சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் பாரதி ஆய்வாளர் (1934-2021)   அல்போன்சோ அருள் தாஸ்  ஓவிய முதல்வர் (1939-2021)

கடிதங்கள்

கடிதங்கள் ஏப்ரல் இதழில் இடம்பெற்றிருந்த கொரோனா ‘உற்றதும் உணர்ந்ததும்’ கட்டுரைகள் அனைத்தும் அருமை.தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் பலரது பயத்தைப் போக்குவதாகவும், அரசு மருத்துவமனை ஊழியர்களின் தன்னேரிலாத் தொண்டுகளையூம் மாசற்ற பணிகளையும் விண்டுரைக்கும் வண்ணம் அவை வரையப் பெற்றிரு

கட்டுரை

பிரிவினை அடிப்படையில் பிரதிநிதித்துவம் இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் குறிப்பிட்ட குழுக்களுக்கான ஏற்பாடுகள் - நிர்விகார் ஜஸ்ஸல் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழுக்களின் நலன்களையும் உள்ளடக்கும் விதத்தில் பிரதிநிதித்துவம் என்பதை வடிவமைப்பது எப்படி? பல ஆண்டுகளாகச்

நேர்காணல்: பத்ரி நாராயண்
தமிழாக்கம்: தி.அ. ஸ்ரீனிவாஸன்

நேர்காணல்: பத்ரி நாராயண் இந்துத்துவ அரசியலின் கருப்பை ஆர்எஸ்எஸ் சமூக வரலாற்றாசிரியரும் பண்பாட்டு மானுடவியலாளருமான பத்ரி நாராயண் அலகாபாத்திலுள்ள ஜி.பி. பந்த் சமூகஅறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதிவரும் அவரது சமீபத்திய நூல் ‘Republic of Hindutva&

கட்டுரை
தினேஷ் அகிரா

கட்டுரை தினேஷ் அகிரா சிவந்த மண்ணில் படரும் காவி மேற்கு வங்கத்தின் அரசியல், சமூகச் சூழல் குறித்துப் பொதுப் புத்தியில் ஊறியிருக்கும் கதையாடல்களைக் கடந்து நோக்கும்போது வங்கத்தில் பாஜகவின் எழுச்சியைப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தேர்தலில் மமதா வென்றாலும் அது மதச்சார்பற்ற அரசியலின் வெற்றி

கதை
யுவன் சந்திரசேகர்

கதை யுவன் சந்திரசேகர் தேஷ் ராகம் நான்கு நட்சத்திர ஓட்டல் அறையின் ரசாயன நறுமணத்தை ஆழ்ந்து நுகர்ந்தவாறே பெட்டியையும் தோள்பையையும் வைத்துவிட்டு, ஷூக்களைக் கழற்றி ரப்பர் செருப்பை அணிந்து, வெளியே வந்தேன். மெல்லிய வெளிச்சம் நிரவிய நீண்ட வராந்தா. ஐந்து மாடிக் கட்டடத்தின் நாலாவது மாடியில் அமைந்

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

கட்டுரை சச்சிதானந்தன் சுகிர்தராஜா அதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல் எட்வர்ட் ஸெயித் தற்செயலாகத்தான் என் கண்ணில் பட்டார். அவரின் எழுத்துக்களைப் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் வழக்கமான வழிகளான கல்விசார் ஏடுகளிலிருந்தோ கருத்தரங்குகளிலிருந்தோ நான் அறியவில்லை. 90களின் தொடக்கத்தி

கவிதைகள்
கவிதை மொழிபெயர்ப்பு: சிவசங்கர் எஸ்.ஜே.

கவிதை மொழிபெயர்ப்பு சிவசங்கர் எஸ்.ஜே. இரண்டு கவிஞர்கள் ஏழு கவிதைகள் குறியீடு “அவள் கவனிப்பாரின்றி இறந்துபோனாள்” என்னுடைய கல்லறை வாசகம் இதுவாக இருக்கலாம் அது எங்காகவுமிருக்கலாம், ஒருவர் மரிப்பதற்கு உத்தரவாதமில்லை எங்கு பிறந்தாள் எங்கு வாழ்ந்தாள் எந்த இடத்திலும் இருக்கல

திரை / கர்ணன்
சைதன்யா

திரை / கர்ணன் சைதன்யா போராட அழைக்கிறானா கர்ணன்? “நாம பஸ்ஸை நிறுத்தினதுகூட அவங்களுக்குப் பிரச்சினை இல்ல, தலைப்பாகை கட்டியிருக்கறதுதான் பிரச்சினை . . . நிமிந்து நிக்கறதுதான் பிரச்சினை . . .” பொடியன்குளம் என்னும் ஊரின் தலைவர் பேசும் இந்த வசனம்தான் ‘கர்ணன்’ படத்தி

திரை / கர்ணன்
ஸ்டாலின் ராஜாங்கம்

திரை / கர்ணன் ஸ்டாலின் ராஜாங்கம் போராட்ட வரலாற்றின் வரைபடம் சாலையிலிருந்து தள்ளி உள்ளொடுங்கியிருக்கிறது பொடியன்குளம் கிராமம். சாலைக்கு நடந்து வந்தாலும் அவர்களுக்கெனப் பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்து தரப்பட்டிருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள்மீது அரசு எந்திரங்கள் நிகழ்த்

பாரதியியல்
ய. மணிகண்டன்

பாரதியியல் ய. மணிகண்டன் ஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி? “நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா?” என ஒருசாலை மாணாக்கரான வேதசகாயகுமார் கேட்ட கேள்வி, நாஞ்சில் நாடனையும்  அவரது எழுத்துவழிப் பலரையும் ஆவுடையக்காளைப் பற்றிச் சிந்திக்கச் செய்திருக்கின்றது. நாஞ்சி

கட்டுரை
பெருமாள்முருகன்

கட்டுரை பெருமாள்முருகன் மீனாட்சிசுந்தரம் என்னவானார்? உ.வே.சாமிநாதையர் தம் ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளைமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை நாடறியும். அதை மிதமிஞ்சிய குருபக்தி என்றே சொல்லலாம். அக்குருபக்தி வெறுமனே மனதோடு நின்றுவிடவில்லை. பல வ

விருது

புதுச்சேரிப் பேராசிரியருக்கு பிரஞ்சு அரசின் உயரிய விருது பிரஞ்சு மொழிக்கும் கல்விக்கும் ஆற்றிய சேவையினைச் சிறப்பிக்கும் வகையில் புதுச்சேரிப் பல்கலைக்கழக முன்னாள் பிரஞ்சு துறைத் தலைவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான இரா. கிருஷ்ணமூர்த்திக்கு பிரான்ஸ் தன் நாட்டின் உயரிய விருதான கொம்மாந்தர் விருதி

கதை
இளங்கோ, ஓவியம் - றஷ்மி

கதை இளங்கோ Mr. K கோடைகாலத்தின் தொடக்கமாக அப்போது இருந்திருக்க வேண்டும். நிலம் முழுதும் பசுமை விரிந்துகிடந்தது. சணல் வயல்கள் மஞ்சள் நதிகளைப்போல இடையிடையே நெளிந்தோடின. வெயிலும் இடைக்கிடை மழையுமென வாழ்வதற்கு இதைவிட வேறென்ன வேண்டுமென நினைக்க வைக்குமளவுக்குக் காலநிலை மனத்துக்கு உவப்பானதாக இர

நேர்காணல்: நாகரத்தினம் கிருஷ்ணா
க. பஞ்சாங்கம்

நேர்காணல்: நாகரத்தினம் கிருஷ்ணா சந்திப்பு: க. பஞ்சாங்கம் தனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை புதுச்சேரியைச் சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா தற்போது பாரிஸில் வசிக்கிறார். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக அங்கு செயல்படுகிறார். ‘லெ கிளேஸியோ’, ‘பிரான்சுவாஸ் சகன்’, ‘அல்ப

கவிதைகள்
றாம் சந்தோஷ்

கவிதைகள் றாம் சந்தோஷ் 1. ‘சார்’ எனும் ஒரு டஜன் விளிப்புகள் அவன் உங்கள் முன்னே நிற்கிறான் பதற்றமுற்று அல்லது அவனைப் பதற்றமுறச்செய்யும் தோரணையில் உங்களால் உங்கள் முன் நிற்கிறான் அவன் முன்னே நீங்கள் (உங்களில் யாராகவும் இருக்கலாம்) கையில் வாளொடு, நீண்ட வாளொடு, அல்லது குற

கட்டுரை
எத்திராஜ் அகிலன்

கட்டுரை எத்திராஜ் அகிலன் காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும் காலச்சுவடு அலுவலகத்தில் சுகுமாரன், அ.கா. பெருமாள், எத்திராஜ் அகிலன், தி.அ. ஸ்ரீனிவாஸன், எம்.எஸ் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 36 ஆண்டுக்கால ஆசிரியப்பணியை நிறைவுசெய்து 2012ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஓய்வுபெற்ற பிறகு, மேற்கொண

பதிவு
கிருஷ்ண பிரபு

பதிவு கிருஷ்ண பிரபு மூக்கையா இந்தியக் கலை மரபில் தனிப்பட்ட கலைஞனின் சுயவெளிப்பாட்டு ஊடகமாக மட்டுமே கலை இருந்ததில்லை. ஆன்மீகம், அரசியல், சமயம் போன்ற அதிகாரக் குழுக்களின் உணர்வையே அது பிரதிபலித்திருக்கிறது. ஓவியங்களும் சிற்பங்களும் அவ்வாறே உருவாக்கப்பட்டன. கீழைத் தேய நாடுகளின் எல்லா இனக்

அஞ்சலி: ஹெச். பாலசுப்பிரமணியன் (1932 - 2021)
பென்னேசன்

அஞ்சலி: ஹெச். பாலசுப்பிரமணியன் (1932 - 2021) பென்னேசன் ஓய்வறியா மொழிப்பறவை படஉதவி: குமரி நீலகாந்தன் இடுங்கிச் சுருங்கிய சிறிய கண்கள். ரொம்ப அருகில் நின்று கேட்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மிகவும் மெல்லிய தொனி. சத்தம் வெளியில் கேட்காத வண்ணம் அமைந்த குரல். எப்போதும் சிரிப்பை உத

கவிதைகள்
பா. ராஜா

கவிதைகள் பா. ராஜா பல் துலக்குதல்: 1 கைக்கு வாட்டமாய் ஒரு அரைச்செங்கல் கிடைத்ததும் வாய்க்கு வாட்டமாய் ஒரு கெட்ட வார்த்தையும் கூடவே கிடைத்து விட்டது அவனுக்கு என் தாயைப்பழிக்கும் சொல் அது கேட்டதும் செத்திருக்கவும் அல்லது கொன்றிருக்கவும் வேண்டும் அங்கொரு கிணறு இருந்தது அவன் விட்டெ

மதிப்புரை
ச. பால்ராஜ்

மதிப்புரை விடுதலை உணர்வின் போராட்டம் ச. பால்ராஜ் இந்திய விடுதலைப் போராட்டமும் கிறித்தவர்களும் எம்.ஏ. சேவியர், சே.ச.   வெளியீடு வைகறைப் பதிப்பகம், 6, மெயின் ரோடு, திண்டுக்கல் 624 001 பக். 288 ரூ. 1 50 இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தில் தனது ஆதிக்கத்தை

உள்ளடக்கம்