போராட்ட வரலாற்றின் வரைபடம்
திரை / கர்ணன்
ஸ்டாலின் ராஜாங்கம்
போராட்ட வரலாற்றின் வரைபடம்
சாலையிலிருந்து தள்ளி உள்ளொடுங்கியிருக்கிறது பொடியன்குளம் கிராமம். சாலைக்கு நடந்து வந்தாலும் அவர்களுக்கெனப் பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்து தரப்பட்டிருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள்மீது அரசு எந்திரங்கள் நிகழ்த்திவரும் வழமையான புறக்கணிப்புகளே இவை. இதனால் பொடியன்குளம் மக்கள் சற்றுத் தள்ளியிருக்கும் மேலூருக்கு நடந்துசென்று பேருந்து ஏற வேண்டியிருக்கிறது. பேருந்து ஏறவரும் அவ்வூர் மக்களை அங்கிருக்கும் அதிகாரச் சாதியினர் சீண்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி மோதல்க