தேஷ் ராகம்
கதை
யுவன் சந்திரசேகர்
தேஷ் ராகம்
நான்கு நட்சத்திர ஓட்டல் அறையின் ரசாயன நறுமணத்தை ஆழ்ந்து நுகர்ந்தவாறே பெட்டியையும் தோள்பையையும் வைத்துவிட்டு, ஷூக்களைக் கழற்றி ரப்பர் செருப்பை அணிந்து, வெளியே வந்தேன். மெல்லிய வெளிச்சம் நிரவிய நீண்ட வராந்தா. ஐந்து மாடிக் கட்டடத்தின் நாலாவது மாடியில் அமைந்திருந்தது என் அறை. வழக்கமாகத் தங்கும் ஓட்டல். வழக்கம்போலவே தனக்குள் ஆழ்ந்து கிடந்தது. ஆனால் பாதுஷாகார் ஊர் பரபரப்புக்குப் பெயர்பெற்றது – சரித்திர காலத்திலிருந்தே. இன்று என்னவோ, ஒட்டுமொத்த ஊரே மௌனவிரதம் அனுஷ்டிக்கிற மாதிரி நிசப்தத்தில் ஊறிக் கிட