புதுச்சேரிப் பேராசிரியருக்கு பிரஞ்சு அரசின் உயரிய விருது
புதுச்சேரிப் பேராசிரியருக்கு பிரஞ்சு அரசின் உயரிய விருது
பிரஞ்சு மொழிக்கும் கல்விக்கும் ஆற்றிய சேவையினைச் சிறப்பிக்கும் வகையில் புதுச்சேரிப் பல்கலைக்கழக முன்னாள் பிரஞ்சு துறைத் தலைவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான இரா. கிருஷ்ணமூர்த்திக்கு பிரான்ஸ் தன் நாட்டின் உயரிய விருதான கொம்மாந்தர் விருதினை வழங்கிக் கவுரவித்து இருக்கிறது.
இவர் ஏற்கெனவே பெற்ற செவாலியே, ஒபிசெயே ஆகிய விருதுகளைத் தொடர்ந்து, அவற்றுக்கு அடுத்த நிலைக்கான இவ்விருதினை இப்போது பெற்றுள்ளார்.
மார்ச் 23ஆம் தேதி புதுவை பிரஞ்சு தூதரகத் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், தூதரக அதிகாரி திருமதி லீஸ் தல்போ பரே இவ்விருதினைப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கிப் பாராட்டினார்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ப