சிவந்த மண்ணில் படரும் காவி
கட்டுரை
தினேஷ் அகிரா
சிவந்த மண்ணில் படரும் காவி
மேற்கு வங்கத்தின் அரசியல், சமூகச் சூழல் குறித்துப் பொதுப் புத்தியில் ஊறியிருக்கும் கதையாடல்களைக் கடந்து நோக்கும்போது வங்கத்தில் பாஜகவின் எழுச்சியைப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தேர்தலில் மமதா வென்றாலும் அது மதச்சார்பற்ற அரசியலின் வெற்றி அல்ல என்றும் புரிந்துகொள்ள முடியும். பாஜக, வங்க மண்ணில் தன்னுடைய இந்துத்துவ அரசியலுக்கான விதைகளை ஆழ விதைத்து, நடைமுறை அரசியல் உத்திகள் என்னும் உரமிட்டு, காலம் கனியப் பொறுமையுடன் காத்திருந்து அறுவடை செய்வது எப்படி என்பதைச் சமூக, வரலாற்றுப் பார்வையுடன் இக