ஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி?
பாரதியியல்
ய. மணிகண்டன்
ஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி?
“நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா?” என ஒருசாலை மாணாக்கரான வேதசகாயகுமார் கேட்ட கேள்வி, நாஞ்சில் நாடனையும் அவரது எழுத்துவழிப் பலரையும் ஆவுடையக்காளைப் பற்றிச் சிந்திக்கச் செய்திருக்கின்றது. நாஞ்சில் நாடன்வழி (சொல்வனம் 28.03.2010) ஆவுடையக்காளை முதன்முறையாக அறிந்துகொண்ட கவிஞர் புதிய மாதவி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
அடிப்படையில் பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவள் நான். அக்காளின் எல்லாக் கருத்துகளுடனும் உடன்படுவது எனக்குச் சாத்தியமில்