அதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல்
கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
அதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல்
எட்வர்ட் ஸெயித் தற்செயலாகத்தான் என் கண்ணில் பட்டார். அவரின் எழுத்துக்களைப் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் வழக்கமான வழிகளான கல்விசார் ஏடுகளிலிருந்தோ கருத்தரங்குகளிலிருந்தோ நான் அறியவில்லை. 90களின் தொடக்கத்தில் பெர்மீங்கம் புத்தகக்கடை மேசையில் அவருக்குப் பாராட்டையும் பழிப்பையும் ஒரே நேரத்தில் வாங்கித் தந்த Orientalism ‘கீழைத்திசைவாதம்’ நூலைத் தற்செயலாகப் பார்த்தேன். ஸெயித் அவருடைய வாழ்நாளில் வேறு எந்தப் புத்தகம் எழுதாவிட்டாலும், அவருடை