தலையங்கம்
ஆசிரியர் குழு

யூடியூப் ஊடகத்தில் இயங்கிவந்த சவுக்கு சங்கரைத் தமிழகக் காவல் துறை கைதுசெய்தது அண்மையில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. கைது நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் பல வாதங்கள் எழுகின்றன. அரசியல்வாதிகளின் மீது, குறிப்பாக ஆளுங்கட்சியினர்மீது சங்கர் முன்வைத்த கடுமையான குற்றச்சாட்டுக்கள்,

கட்டுரை
இரா. திருநாவுக்கரசு

கடந்த மே மாதம் 3ஆம் தேதி, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 2016இல் தற்கொலை செய்துகொண்ட ஆய்வு மாணவர் ரோஹித் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்று கூறி அது தொடர்பான வழக்கை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்திருந்தது. முதலில், இதுபோன்ற பெரும் கவனம் பெற்ற வழக்குகள

அஞ்சலி: சுதிர் காக்கர் (1938-2024)
போகன் சங்கர்

சுதிர் காக்கர் மறைந்துவிட்டார்.  இந்தியாவின் முதல் உளப் பகுப்பாய்வாளர்; உள மருத்துவர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஏனெனில் உள மருத்துவம் இன்று சிக்மண்ட் பிராய்டு வகுத்த உளப் பகுப்பாய்வு என்கிற சிகிச்சை முறையை விட்டு விலகிவிட்டது. அது நம்முடைய நவீன உள மருத்துவத்தில் பெரிய பங்கு எதுவும் வகி

கட்டுரை
நாஞ்சில் நாடன்

சில கையறுநிலைக் கட்டுரைகள் எழுதிய துண்டு; எழுதவந்த இந்த ஐம்பதாண்டுக் காலத்தில், எங்களுக்குக் கற்பித்தவர், என்னை வழி நடத்தியவர், அறிவுறுத்தியவர், ஆதரித்தவர் மரணங்களின்போது. ஆனால் அவரெலாம் மூத்தோர். அஃதோர் மனச்சமாதானம். பதினாறு ஆண்டுகள் முன்பு, பன்னிரண்டு ஆண்டுகள் இளைய என் தம்பியருள் ஒருவன் அகாலமாய்ப்

கதை
வண்ணநிலவன்

ஓவியங்கள்: மணிவண்ணன் திருப்பரங்குன்றத்தில் மாமாவின் பேத்திக்குக் கல்யாணம். மாமா என்றால் தாய்மாமா. அம்மாவின் ஒரே தம்பி. அவர் இறந்து நான்கு வருஷங்களாகிவிட்டன. மாமாவுடைய மகன் மணி ஞாபகமாகக் கல்யாணப் பத்திரிகை அனுப்பியிருந்தான். பத்திரிகை, ஒரு பக்கம் மஞ்சள் கலரிலும் மறுபக்கம் ரோஸ் கலரிலும் இருக்கு

நூல் அறிமுகம்
பெருமாள்முருகன்

டாக்டரின் தொணதொணப்பு எம்.கே. முருகானந்தன் ஜீவநதி வெளியீடு 2021, அல்வாய், இலங்கை, விலை: ரூ.400/ (இலங்கை ரூபாய்)   2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்ப

கட்டுரை
சித்ரா பாலசுப்பிரமணியம்

திருச்செங்கோடு ஆசிரமத்தில் காந்தி தங்கியிருந்த குடில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை இராஜாஜி 1925ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி தோற்றுவித்தார். வரும் ஆண்டு இந்த ஆசிரமத்தின் நூற்றாண்டு. இந்த ஆசிரமத்தின் பணிகள் குறித்த செய்திகள் அதிகம் தொகுக்கப்படவில்லை. அதற்கான சிறு முயற்சியே இக்கட்டுரை

கட்டுரை
கே. தியாகராஜன்

Courtesy: nextpit 1. சொற்களும் கலைச்சொற்களும் வரலாற்றுக்கு முந்திய, மனித குலத்தின் தொடக்கப் புள்ளியாகிய, நம்முடைய மூதாதையர்கள் தம்மையும் தம்மைச் சுற்றியுள்ள மற்ற மனிதர்களையும் பார்த்தார்கள். மரம், செடி, கொடி, புல், பூண்டு, பறவைகள், மற்ற உயிரினங்கள், மண்ணிலும் விண்ணிலும் உள்ள அசையும் / அசைய

கட்டுரை
மருதன்

‘என்னால் ஏன் எதுவுமே செய்ய முடியாமல் போனது? என்னால் ஏன் அவனைத் தடுக்க முடியவில்லை? என்னைக் கொல்லப் பாய்ந்து வந்த வனிடம், இந்தா எடுத்துக் கொள் என்று எப்படி என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடிந்தது?  ஒரு சிறு எதிர்ப்பையும் வெளிப்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமானவனா நான்?’ வாழ்

புத்தகப் பகுதி விஜய நகரம்

விஜய நகரம் (உலக கிளாசிக் நாவல்) சல்மான் ருஷ்டி தமிழில்: ஆர். சிவகுமார் ரூ.580 காலச்சுவடு ஜூலை வெளியீடாக வரவிருக்கும் ‘விஜய நகரம்’ நாவலிலிருந்து ஒரு பகுதி   தொடக்கத்தில் வலி மட்டும் இருந்தது; விரும்பத்தக்கதாக, மகிழ்ச்சி தரும் நிம்மதியாக மரணம் இருக்கும் என்று நினை

கதை
அரவிந்தன்

ஓவியங்கள்: மணிவண்ணன் அலுவலகத்திற்குள் தான் நுழைந்ததும் ராமமூர்த்தியின் முகம் மாறியதை சாம்பசிவன் கவனித்தான். தான் வந்திருக்க வேண்டிய நேரத்திற்கு ஒரு மணிநேரம் பிந்தி வந்திருப்பதும் ஒரு மணிநேரத்திற்கு முன்பு மிக முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருந்தது என்பதும் அப்போதுதான் நினைவுக்கு வந்தத

கடிதங்கள்

கடிதங்கள் வழி துலங்கும் சித்திரம் சுந்தர ராமசாமி தன் நண்பர் சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் 2022 செப்டம்பரிலிருந்து (273வது இதழ்) காலச்சுவடில் பிரசுரித்துவருகிறோம். அக்கடிதங்களில் பலமுறை ‘க்ரியா’ பதிப்பகம் தொடர்பான குறிப்புகள் வருகின்றன. க்ரியாவின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்த சு.ரா

மதிப்புரை
சாமிநாதன்

கய்த பூவு (நாவல்) மலர்வதி வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை நாகர்கோவில் - 1 பக். 304 ரூ. 380 மலர்வதியின் ‘கய்த பூ’ நாவல், தனிமனித அலகுகளில் ஒன்றான பெண்ணின் கதையை மையப் பாத்திரமாக்கி வாழ்க்கைப் பற்றிய சமூகப் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. ரோசா என்ற பாத்தி

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

பெரியார்: அவர் ஏன் பெரியார்? (‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்’ என்ற ப. திருமாவேலனின் நூலுக்கான விமர்சனக் கட்டுரைகள்) (தொ-ர்கள்): கல்யாணராமன், சீதாபதி ரகு வெளியீடு: விப்ராஸ் பதிப்பகம் F1 பேஸ் பார்க், 10/27 ஆறாவது குறுக்குத் தெரு ஷெனாய் நகர், சென்னை - 600 030