சோம்ஸ்கியின் அறமும் எப்ஸ்டீனுடனான அவரது நட்பும்

நோம் சோம்ஸ்கியும் அவரது மனைவி வலேரியா வாஸர்மேனும், வலதுபுறம் ஜெஃப்ரி எப்ஸ்டீனும்
நோம் சோம்ஸ்கி. இந்தப் பெயரை அறிந்திருப்பவர்களில், அவரது எழுத்துக்களை ஓரளவு படித்திருப்பவர்களில் பலருக்கும் அவர் நமது காலத்தின் மாபெரும் சிந்தனையாளர்களுள் ஒருவர் என்ற அளவில்தான் தெரிந்திருக்கும். மொழியியல் துறையில் அவர் நிகழ்த்திய புரட்சி பற்றியும் அவரது மேதைமையின் வீச்செல்லை பற்றியும், அவரது 65 ஆண்டுகாலச் செயல்பாடுகள் பற்றியும் நன்கு அறிந்தவர்களுக்குத்தான் மனித வரலாற்றில் சோம்ஸ்கியின் இடம் கார்ல் மார்க்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்றோருக்கு இணையானது என்பது தெரிந்திருக்கும். அவரது அரசியல் சித்தாந்தம், கோட்பாடுகள் குறித்து ஒருமுறை கேட்கப்பட்டபோது அவற்றை ஒரு தபால் முத்திரையின் பின்புறத்தில் எழுதிவிட முடியும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
அ
