கோப்புகள், கோமகன்கள், கோதைகள்: சக்தி, செல்வம், சாசனம்

மார்-ஏ-லாகோ கிளப்பில் டிரம்ப், மெலனியா க்னாஸ், எப்ஸ்டைன், மேக்ஸ்வெல் ஆகியோர் (2000, பிப்ரவரி 12)
முதலிலேயே இதைச் சொல்லிவிடுகிறேன்: இந்தக் கட்டுரையில் தூஷணமான சொற்களும் பாலின சம்பந்தப்பட்ட காரியங்களும் உள்ளன. காமசூத்திரம் என்ற நூலே இருக்கிறது என்பதைத் தெரியாதிருக்கிற அதீத சுத்தவாதிகள், மாலைபோட்ட ஐயப்ப பக்தர்கள் புகை, சாராயம் போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதுபோல் இந்தப் பக்கங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது.
கட்டுரைக்குள் போகும் முன், யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) என்று சிறிய அறிமுகம்: இவர் நியூயார்க் புரூக்ளினில் பிறந்த ஓர் அமெரிக்கர். ஆரம்பத்தில் அவர் ஒரு பள்ளியில் கணிதமும் இயற்பியலும் கற்பித்தார். பின்னர் ‘பியர் ஸ்டியர்ன்ஸ்’ என்ற முதலீட்டு நிறுவனத்தில் நிதித்துறைக்கு மாறி, அங்கிருந்து தனது சொந்த
