வரலாற்றியல் கண்ணோட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சாதியியல்

ஈழத் தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றின் ஊடாகக் கட்டமைந்தது. இந்த வரலாறு என்றுமே உறைபனியல்ல. அது ஓடும் ஜீவநதி. அதனால்தான் இந்தியத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் ஈழச் சமூகம் மாறுபட்ட தொன்மை, தொடர்ச்சி, அசைவியக்கங்கள் கொண்டுள்ளது. சிறிய தேசம் என்றாலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேச, வட்டார வேறுபாடுகளையும் அது கொண்டுள்ளது.
ஈழச் சமூகம் பற்றிய கற்கை நெறியில் அயல் பார்வைகளும் இயல்பார்வைகளும் நம் வசப்பட்டுள்ளன. இவை கணிசமான புரிதல்களைக் காட்டுகின்றன. இவை யாவற்றையும் ஒரு நேர்க்கோட்டில், சமதளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள இயலுமா? இயலும் என்கிறார் கந்தையா சண்முகலிங்கம். இதற்காக இவர் எடுத்துள்ள சீரிய முயற்சிதான் ‘யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்’ எனும் இந்நூல். இதன் வகைமையில் இது ஒரு முக்கியமான நூல்.
நூலாசிரியர் நன்கறியப்பட்ட மொழிபெயர்ப்பாளர். இவர் நம
