‘உ வினு எ- ஃபாத்து!’

ஓவியம்: நரசிம்ம பாலாஜி
சிறந்த, பதப்படுத்தப்பட்டு, நெடுங்காலமெடுக்கும் ஒயினில் மெல்லிய இனிப்பற்ற சுவையுண்டு. எளிமையாக இப்படிச் சொல்வார்கள்; ஊறல் போட உபயோகப்படுத்தப்படும் ஓக் பேரல்கள் அதற்குக் காரணம் என. ஆனால் மரங்களின் கலங்கள் அளிக்கும் சுவை வேறு, உலோகமாக இருந்தாலும் சரி. ஒயினிலிருக்கும் இயல்பான சுவையையும், இதையும் அதிகம் குழப்பிக்கொள்கிறோம். நான் குறிப்பிடும் அச்சுவை, இனிப்பும் துவர்ப்பும் கலந்ததுபோலத் தோன்றலாம். முதிர்ச்சியான ஒயினில் மட்டுமே அச்சுவையை உணர முடியும்.’
பவுலா மேற்கொண்டு எழுதியிருந்த அக்கட்டுரையின் வேறு சில வரிகளும் நினைவிலிருக்கின்றன. அவரைச் சந்திக்கவே பலேர்மோ வந்தேன். அக்கட்டுரையை வாசித்த பின் உண்டான ஆர்வத்தால், ஒயின்பற்றி நேரடியாகவே கேட்டறியலாம் எனும் ஆர்வமுண்டானது. பவுலாவிற்குப் பலமுறை செய்தி
