மன்னிப்புக் கேட்பவர்

ஓவியம்: மணிவண்ணன்
அது ஜூன் மாதம், காலை நேரக் கதிரவன் மேகங்களிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, பாரீஸ் தெருவில் மெல்ல நடந்துகொண்டிருந்த அலான் இளம்பெண்களைக் கவனித்தான்: அவர்கள் ஒவ்வொருவரும் பெல்ட் அணிந்து கீழிறங்கிய கால்சட்டைக்கும், மேலேறியிருந்த மிகச்சிறிய மேலாடைக்கும் இடையில் தங்கள் தொப்புளைக் காட்டினர். அவன் கவர்ந்திழுக்கப்பட்டான், கவர்ந்திழுக்கப்பட்டதுடன் சஞ்சலமடைந்தான், அவர்களின், வசீகர ஆற்றல் அவர்களின் தொடைகளிலோ, பிட்டங்களிலோ, மார்பகங்களிலோ இல்லை, மாறாக உடலின் மையத்திலிருக்கும் அந்தச் சிறிய வட்டத் துளைக்குள் குடியிருப்பதுபோல் தோன்றியது.
இது அவனைத் தூண்டிச் சிந்திக்கச் செய்தது: ஒருவன் (அல்லது ஒரு காலகட்டம்) பெண்ணின் கவர்ச்சி மையமாகத் தொடைகளைப் பார்த்தால், அந்தக் காம உணர்வின் தனித்துவத்தை எப்படி
