மார்ச் 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மார்ச் 2026
    • கட்டுரை
      சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்
      வரலாற்றியல் கண்ணோட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சாதியியல்
      ஒரே நாடு, ஒரே மொழிக்குடும்பம்: பரப்புரையும் யதார்த்தமும்
      நாங்களே எமது மீட்பர்கள் காலனியத் தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம்
    • கதை
      ‘உ வினு எ- ஃபாத்து!’
      மன்னிப்புக் கேட்பவர்
    • அனுபவம்
      யாருமற்றவள்
    • அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026)
      மாந்தருக்குள் ஒரு பாடநூல்
    • சச்சிதானந்தன் சுகிர்தராஜா
      கோப்புகள், கோமகன்கள், கோதைகள்: சக்தி, செல்வம், சாசனம்
    • அஞ்சலி: தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் (1941 &2026)
      எல்லை விரிந்த தமிழ் உள்ளம்
    • எப்ஸ்டீன் ஆவணங்கள்
      சோம்ஸ்கியின் அறமும் எப்ஸ்டீனுடனான அவரது நட்பும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கற்றனைத்தூறும்- 15
      தண்டனை: அன்பின் அடையாளமா?
    • மதிப்புரை
      குடும்பம் - வேலை - கருணை
    • தலையங்கம்-2
      பகடைக்காயாக்கப்படும் பெண்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
      வே.நி. சூர்யா கவிதைகள்
    • தலையங்கம்
      சிறிய கட்சிகள்: கூட்டணி என்னும் நிர்ப்பந்தம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2026 தலையங்கம்-2 பகடைக்காயாக்கப்படும் பெண்கள்

பகடைக்காயாக்கப்படும் பெண்கள்

தலையங்கம்-2
ஆசிரியர் குழு

அண்மையில் பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியிருப்பதும் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குறித்து பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் பேசியிருப்பதும் பரவலான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இவை தற்செயலாக நழுவிய சொற்கள் அல்ல. பெண்களை அவர்கள் சார்ந்த துறைகளில் இரண்டாம்தரப் பங்கேற்பாளர்களாக நிலைநிறுத்தத் துடிக்கும் நீண்டகாலச் சமூக உளவியலின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் துறை சார்ந்த செயல்பாடுகளைக் காட்டிலும் அவரது ஒழுக்கம் குறித்த விவாதமே இங்கே சந்தை மதிப்பைப் பெறுகிறது.

ஆனால், இந்தச் சீரழிவு இன்று நேற்று தொடங்கியதல்ல; பெண்களைக் குறிவைத்துப் பாலின வக்கிரத்தைக் கக்கும் பேச்சுக்கள் தமிழக அரசியல் களத்திற்குப் புதிதல்ல. தமிழக அரசியலின் பிதாமகர்கள் என்று கொண்டாடப்படுபவர்களே இந்த மொழி வன்முறைக்கு அடிக்கல் நாட்டியவர்கள்  என்பதுதான் கசப்பான வரலாறு. உயர்மட்டத் தலைவர்களே ஆபாசமாகப் பேசும் நிலையில் இரண்டாம்மட்டத் தலைவர்களையும் ஆபாசப் பேச்சுக்கென்றே நேர்ந்துவிட்டவர்களையும் பற்றிக் கேட்கவே வேண்டாம். மலினமான ஆபாசப் பேச்சைக் கட்சித் தலைவர்களும் கைதட்டி ரசிப்பது ஆபாசப் பேச்சு தமிழக அரசியலில் சிந்தனையில் ஆழமாக வேரூன்றியுள்ளதன் அடையாளம். இப்படிப் பேசுபவர்கள்மீது அவர்கள் சார்ந்த கட்சிகள் நடவடிக்கைகள் எடுப்பது விதிவிலக்காகவே நிகழ்கிறது. 

தமிழக அரசியலின் ஆணாதிக்க மனநிலை வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்கொண்ட வன்முறைகள். 1989இல் சட்டமன்றத்தில் அவர்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலும் அவரது ஆடை குலைக்கப்பட்டதும் இந்திய ஜனநாயகத்தையே உலுக்கின. அரசியல் மேடைகளில் மட்டுமின்றிச் சட்டமன்றத்திலும் கீழ்த்தரமான பாலியல் அவதூறுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பெண் உடல் அதிகார அரசியலின் சதுரங்கக் களமாக மாற்றப்பட்டிருக்கும் அவலம் அகில இந்திய அளவிலும் நிலவுகிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயப்பிரதாவைப் பற்றிச் சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் ஆபாசமாகப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் தன் கட்சி சகாவான மீனாட்சி நடராஜனைப் பற்றி 2013இல் மோசமாகப் பேசினார். அரசியல் களத்தில் பெண்களின் திறமையையும் ஆளுமையையும் அங்கீகரிக்க மறுக்கும் மனநிலை, அவர்களின் தோற்றத்தையும் நடத்தையையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. பிரியங்கா காந்தியின் அரசியல் வருகையை அவரது ‘அழகான முகத்தோடு’ சுருக்கிப் பேசிய பாஜகவின் கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்துகள் இதற்குச் சான்று. பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கருப்பு நாகத்தோடு ஒப்பிட்டுப் பேசிய கல்யாண் பானர்ஜியின் வசைகளும் இந்த ரகம்தான். தமிழகத்தின் 2021 தேர்தல் களத்தில் திமுகவின் ஆ. ராசா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பையும் அவரது தாயார் குறித்துப் பேசிய சர்ச்சைகளும் பெண்மையை இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் போக்கின் ஒரு பகுதிதான். பெண்ணை உடலளவிலேயே சுருக்கிப் பார்க்கும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள் இவை. 

திரைத்துறைச் சூழல் பாலின வன்மத்தைக் கொண்டாட்டமாகவே மாற்றியிருக்கிறது. ராதா ரவி, பயில்வான் ரங்கநாதன், தயாரிப்பாளர் ராஜன் ஆகியோர் திரைத்துறையில் உள்ள பெண்களைப் பற்றிக் கேவலமாகப் பேசிவருகிறார்கள். நடிகைகளின் உடல்கள், அவர்களது தனிப்பட்ட வாழ்வு ஆகியவை குறித்து வாய்க்குவந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இந்த இழிவுபடுத்தல் சமூகம் நிகழ்த்தும் கூட்டு வன்முறையாக மாறியிருக்கிறது. ஒரு பெண்ணை நோக்கி வீசப்படும் பாலியல் ரீதியான கருத்து ஆயிரக்கணக்கான விருப்புக்குறிகளைப் பெறுவதும், அது ‘மீம்’ வடிவில் கொண்டாடப்படுவதும் ஒரு சமூகமாக நாம் அடைந்திருக்கும் பண்பாட்டுச் சரிவைக் காட்டுகிறது. பொது வெளியில் செயல்படும் பெண்கள் குறித்து நமது ஆழ்மனதில் இருக்கும் பார்வைதான் இதற்குக் காரணம்.

சந்தர்ப்பவாத மௌனமும் சுயநலப் பெண்ணியமும் இந்த இழிவுபடுத்தல்களைக் காட்டிலும் பேரதிர்ச்சி தருவது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அரசியலிலும் சினிமாவிலும் ஒருமித்த குரல் எழுவதில்லை. இந்த மௌனம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் காணப்படுகிறது. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் பல பெண்கள் தங்களுக்குப் பாதிப்பு வரும்போது மட்டும் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இன்னொரு பெண்ணுக்கு அல்லது மாற்று அரசியல் முகாமில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும்போது இவர்கள் மௌனம் காக்கிறார்கள். இத்தகைய மௌனங்கள் பெண்களைக் கூட்டிணைந்த சமூக சக்தியாக மாறவிடாமல் தடுத்து, அவர்களை மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்துகின்றன. பெண்களின் கண்ணியம், உரிமை ஆகியவற்றுக்கான குரலைப் பலவீனப்படுத்துகின்றன.

தமிழக அரசியல்வாதிகளின் நாவுகள் இன்று தார்மீகக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக இழந்துவிட்டன. தங்களைப் புனிதச் சுடர்களாகவும் பண்பாட்டுப் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்ளும் தலைவர்கள், மூடிய அறைகளுக்குள் பேசப்பட்ட வக்கிரங்களைப் பொதுவெளியில் பேசத் துணிவது, சட்டத்தின் மீதோ சமூக ஒழுங்கின் மீதோ அவர்களுக்கு அச்சமில்லை என்பதையே காட்டுகிறது. அரசியல் கட்சிகள் முதலில் தங்கள் மொழியை பண்படுத்திக்கொள்ள வேண்டும். சமூகம் ஒருமித்த குரலில் இந்த ஆணாதிக்க வன்முறையை எதிர்க்க முன்வர வேண்டும். சமூக மௌனம் கலையாதவரை, அரசியல் மேடைகள் பெண்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் பலிபீடங்களாகவே தொடரும். இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டுவது சட்டத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஒரு நாகரிகச் சமூகமாக நம் ஒவ்வொருவரின் தார்மிகக் கடமை.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.