நாங்களே எமது மீட்பர்கள் காலனியத் தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம்

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனிய அரசு இந்திய மக்களுக்கு மேற்கத்தியப் பாணியிலான கல்வி முறையை அறிமுகப்படுத்தப் பொதுக்கல்விக்கூடங்களை ஊக்கு வித்தது. தமிழகத்தில் பொதுப்பள்ளிக் கூடங்களை உருவாக்க பிரிட்டீஷ் இந்திய அரசு முயற்சித்தாலும் இங்கிருந்த சாதியப் பாகுபாடு தலித்துகளைப் புறந்தள்ளியது. வெவ்வெறு சாதியக் குழுக்கள் தொடங்கிய பள்ளிக்கூடங்களில் தலித்துகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இச்சூழலில் காலனியத் தமிழகத்தில் தலித்துகளுக்கான கல்வியைப் பரப்பக் கிறிஸ்தவ மிஷனரிகள், தியோசபிகல் சொசைட்டி, ஹரிஜன சேவா சங்கம், அரசின் தனிப்பள்ளிகள் போன்றவை தலித்துகளின் கல்விக்கான முயற்சிகளை மேற்கொண்டன. காலனியத் தமிழகத்தில் தலித்துகளின் கல்வி வரலாறு குறித்த ஆய்வுகளில் இதுவரை மேற்குறிப்பிட்ட அமைப்புகள், பள்ளிகள் குறித்து மட்டுமே ஓரளவு அறிய முடிகிறது. தலித்துகள் தங்களுக்கான கல்வியைப் பெறுவதற்குத் தாங்களே சுயாதீனமாக உருவாக்
