சம்யுக்தா மாயா கவிதைகள்

ஓவியம்: மதுரை பாபு
1.
மலைச்சிகர உச்சியில்
உயர்ந்த மரக்கிளைகளை
ஊடுருவும் வாடைக் காற்றில்...
மென்சோகத்துடன் பூத்திருக்கும்
ஜகராண்டா மலர்களின் தனிமை...
புகை போன்ற கால்களால்
மேகங்களுக்கிடையில் நடக்கிறது.
கரடுமுரடான மர வேர்களில்
தும்பிக்கையை ஊன்றி...
துயர் தாங்கி ஒற்றையாய் நிற்கிறது...
காட்டுத்தீயில் களிற்றைப் பறிகொடுத்த
தேற்றுவாரற்ற பெண் யானை.
அரவமற்ற இரவில்...
கரிய முதுகின் மீது
மௌனமாய் உதிர்கின்றன
ஊதா நிற மலர்கள்.
2.
மயக்கமான மாய அந்திகளில்
நீ நடந்து செல்லும் – ஒரு
நதிக்கரையாக இருக்க விரும்புகிறேன்.
இல்லையெனில்...
