ஞாநி (1954-2018) : நம் காலத்து நாயகன்
பேசு, உனது உதடுகள் சுதந்திரமாகத்தான் இருக்கின்றன
பேசு, உனது நாக்கு இன்னமும் உனக்குச் சொந்தமாகத்தான் இருக்கிறது
வளைந்து கொடுக்காத உடல் இன்னும் உன்னிடம் இருக்கிறது
பேசு, உனது வாழ்க்கை இன்னும் உன்னிடம்தான் இருக்கிறது
உடலும் நாக்கும் இறப்பதற்கு
இருக்கும் நேரம் மிகக் குறுகியதாய் இருந்தாலும்
பேசு, இன்னும் உண்மை உயிர்ப்புடன்தான் இருக்கிறது
பேச வேண்டியதைப் பேசு.
- ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ்
எழுபதுகளில் பத்திரிகைகள், திரைப்படம், நாடகம் போன்ற பல்வேறு தளங்களில் மாற்றுக் கலாச்சார முயற்சிகள் நடந்துவந்த காலகட்டத்தில் உருவானவர் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி. அந்தக் காலகட்டத்தில் சிறுபத்திரிகை வட்டாரத்தில் வெகுஜன ஊடகவியலாளராகவும் வெகுஜன ஊடகங்களில் சிறுபத்திரிகையாளராகவும் கருதப்பட்டவர். பத்திரிகை, நாடகம், இலக்கியம், தொலைக்காட்சி,