அற்புதங்களைத் திறப்பவை
மனிதர்கள் எதற்காகக் கதை சொல்லத் தொடங் கினார்கள்? அச்சத்தினால் என்பது ஒரு பதில். இருள், ஒளி, உடல், மரணம் என உலகின் ஒவ்வொரு புரிபடாத விசித்திர அம்சமும் இருப்பும் ஆதி மனிதர்களில் மிகுதியான அச்சத்தைப் புகுத்தி யிருக்கும். கதைகளின் வழியாக இயற்கையோடு சமரசம் செய்துகொண்டு அவர்கள் அச்சத்தைக் கடந்தார்கள் எனலாம். ஜேனீஸ் பாரியட்டினுடைய ‘நிலம் மீது படகுகள்’ நூலிலுள்ள முதல் சிறுகதையின் தொடக்கப் பகுதியில் இடம்பெற்றிருக்கிற வரிகள் இவை.
“இறுதியில், மற்ற எல்லாவற்றையும்போல அதுவும் புரிந்துகொள்ள முடியாததே. எனவே நான் எப்படி விளக்குவது?
ஒருவேளை ஆதி நாட்களில் அவர்கள் செய்தது போல் கதை சொல்வதே சிறந்ததாக இருக்கும்.”
(குதிரைகளின் அருவி)
இத்தொகுப்பிலுள்ள ஜேனீஸ் பாரியட்டின் பெரும் பாலான கதைகளில் மேகாலயாவின் பூர்வகுடி இனத்தவர்களான காசி மக்களின் தொன்மங்களும் பழக்கங்களும் பயன்படுத்த