‘எவரும் பிராமணராகலாம்’
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு 2017 அக்டோபர் 9இல் 36 பிராமணரல்லாதோரை - 6 தலித்துகள் உட்பட (வேறுவேறு தலித் சாதிகளிலிருந்து) பிராமண ஆகமக் கோயில்களுக்கு அர்ச்சகர்களாக நியமித்தது. இவர்களில் பெரும்பான்மையோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஈழவர்கள். கோயில் அர்ச்சகர்கள் பணிக்கு இட ஒதுக்கீட்டு முறையில் நியமனம் செய்யும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் இந்த முடிவு, அதன் ‘முற்போக்கான’ தன்மையால் இந்தியாவில் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. இது கேரள அரசின் புரட்சிகர முடிவாகவும் மலையாள சமூகத்தின் முற்போக்கான இயல்பின் குறியீடாகவும் கொண்டாடப்படுகிறது.
இருப்பினும் 1936இன் கோயில் நுழைவுப் பிரகடனத்துக்குப் பிறகு எட்டு பதின்ம ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த முயற்சி கை கூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘முன்னேற்றம்’ என்று கொண்டாடப்படுகின்ற விதந்தோதுதல் கேரளக் கோயில்களில் நிலவும் சாதி