பொதுமகளும் குலமகளும் : 1990 சினிமாக்களில் நடைபெற்ற ஊடாட்டம்
தமிழ் சினிமா கதையாடல்களில் காதலுக்கு அடுத்தபடியாக அனாதை என்ற அம்சத்திற்குத் தான் அதிக இடம் கிடைத்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அனாதை என்ற சொல்லாடலை மையப்படுத்தி பாத்திரங்களும் கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதன் தொடர்ச்சியில் இடம்பெற்ற மற்றொரு அம்சம் அப்பாவைத் தேடும் நாயகன். அனாதை என்பதைவிட அப்பா பேர் தெரியாதவர் என்பதால் உருவாகும் கலாச்சார நெருக்கடி அழுத்தமானது. பெரும்பாலும் இத்தன்மை ஆணாகிய நாயகன் மீது வைத்தே சித்தரிக்கப்படும். நாயகன் தன்னைவிட சாதியாலோ வர்க்கத்தாலோ உயர்ந்த பெண்ணைக் காதலிப்பான். அக்காதல் கல்யாணத்தை எட்டும்போது நாயகி தரப்பிலிருந்து நாயகனின் அப்பா பெயர் பற்றிக் கேள்வி எழும். அப்போதுதான் அவன் தந்தையின் பெயர்கூட தனக்குத் தெரியாததை உணர்வான். அப்பா பெயர் அறியாததால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணரும் நாயகன் உடனே ஓடிவந்து தன் அம்மாவிடமோ வளர்க்கும் எவரிடமோ முதன்முறையாக அப்பாவைப்