இறந்தவர் நடமாட்டம்
கார் மெல்ல ஊர்ந்து சென்றது. நகரம் ஒரு பெரிய நாடகத் திரையாக அவர்களை நோக்கி நகர்ந்து வந்தது. நகரின் மீது பெரிய டிராகன் பறந்துவருவதைப்போல இருந்த மேம்பாலத்தைப் பிரமிப்புடன் பார்த்தாள் காயத்ரி. ரகுராமின் கண்கள் வேறேதோ காலத்தைப் பார்த்தவாறு இருந்தன.
ரவுண்டானாவைச் சுற்றி வாகனங்கள் தேங்க ஆரம்பித்தன. போக்குவரத்து ஸ்தம்பிக்கப்போகிறது எனத் தெரிந்தாலும் வேறு வழியின்றி சுழலுக்குள் இழுக்கப்படும் பொருள்போல கார் முன்னேறியது. ரவுண்டானாவைச் சுற்றி அத்தனை வாகனங்களும் புதுவெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்பட்ட செடி செத்தைகள்போல தேங்கி நின்றன. மேம்பாலத்தின் மீதும் சமையல் கட்டில் அடுக்கிவைக்கப்பட்ட டப்பாக்கள் போல கார்கள் வரிசையாக நின்றன. “எப்படியும் அரைமணி நேரம் ஆயிடும்,” என்றாள். வாடகைக் கார் டிரைவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
சாலையோரம் இருந்த பழச்சாறு கடையைப் பார்த்ததும் அவளுக்கு ஜூஸ் குடிக்க வ