கர்நாடக சங்கீதத்தின் : பிராமணமயமாக்கலும் எம்.எஸ். சுப்புலட்சுமியும்
”எம்.எஸ். சுப்புலட்சுமியின் நிறம் கறுப் பாக இருந்திருந்தாலோ, அவர் தன்னை பிராமணப் பெண்மணியாக முன்னிறுத் தாமல் இருந்திருந்தாலோ, பக்த சிரோன்மணியாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருந்தாலோ அவர் இன்று பிராமணர்களிடையே அடைந் திருக்கும் ஏகோபித்த ஏற்பையோ புகழையோ அடைந்திருப்பாரா,” என்று டி.எம். கிருஷ்ணா கேள்வி எழுப்ப சர்ச்சை வெடித்தது.
கிருஷ்ணாவும் அவருக்கு மறுப்பு எழுதிய பலரும் கர்நாடகச் சங்கீதமும் பரதமும் பிராமண மயமாக்கலின் பின்னணியானதையும் எம்.எஸ். சமகாலத்தில் எப்படிப் பார்க்கப் பட்டார் என்பன போன்றவற்றுக்குத் தரவுகளோடு எழுதப்பட்ட முதன்மை ஆராய்ச்சியாளர்களின் பல்கலைக் கழக வெளியீடுகளைச் சுட்டிக் காட்டவில்லை. வரலாற்றெழுத்தில் முன் முடிவுகளுக்கு சாதகமானத் தரவுகளைத் தேடிப்போகக் கூடாது. மேலும் சாதகமான தரவுகள் கிடைத்தாலும் அக்கருத்துகள் தகுந்த ஆதாரங்களோடு வைக்கப்பட்டிருக்கின்றனவா, அவற்றை யாராவது மேலதிக