வாரத்துக்கு ஏழு பந்துகள்
அவனும் இவனும்
களத்தில். . .
அந்த அம்பயர்
நான்கு விரல்களைப்
பக்கவாட்டில் வீசுகிறான்
இரண்டு கைகளின்
ஒற்றை விரல்களைச்
சேர்ந்தாற்போல்
வான் நோக்கி உயர்த்துகிறான்.
கவிழ்ந்த இரட்டை
விரல்களை சுட்டுகிறான்
இடைவேளைக்குப்பின்
அவனும் இவனும்
பந்து வீச
ஒவ்வொரு பந்துக்கும்
ஒற்றை விரலை
உயரே தூக்கி
காட்டுகிறான்.
மட்டையோடு நானும்
களமிறங்க
அம்பயரின் ஒற்றை விரல்
உயர்கிறது
பந்து வீசித் தொலைப்போம்
என்றால்
அந்த அம்பயர்
அப்பனோளி
பந்துக்கு நாலுமுறை
வலதுகையை வலப்பக்கம்
நீட்டி
இல்லை. . .
இரண்டு கையையும்
இரண்டு பக்கம்
அகல விரித்து
சைகை செய்கிறான்.
ஒரு ஓவருக்குள்
ஒரு மாதம் முடிந்துவிடுகிறது.
மின்னஞ்சல்: prismshiva@gmail.com