பரிசுப்பொருள்
பாண்டவையாற்றைக் குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்துகிடந்தது. மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கிய போது சாலையில் பரவலாகத் தேங்கியிருந்த மழைநீர் காலைச் சூரியன் பட்டு அவள் கண்களைக் கூசச் செய்தது. புறங்கையைக் கண்களுக்கு நேரே நீட்டிக் கொண்டு நின்று பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உடற்சமநிலையின்மையைச் சரிப்படுத்த முயன்றாள். கை மூட்டுகளிலும் விரல் பொருதுகளிலும் உடலிலும் மெல்லிய உலைச்சல் எடுக்க நின்றபடியே சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு விடுதலையை உணர முடிந்தது. வெறுமையுடன் புன்னகைத்துக்கொண்டாள். அவளெதிரே வந்து நின்ற சன்ஸ்கிரீன் ஒட்டப்பட்ட காரில் முகத்தைப் பார்த்தாள். சிகையைப் பின்னுக்குத் தள்ளி விலகியிருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றி நடுவே அமைத்தபோது முகம் பொலிவுற்றது. அவள் முக