இன்று புதியவர்கள்
ரீட்டாபரமலிங்கம்
நார்வேயில் வாழும் 24 வயது நிரம்பிய தமிழ்ப்பெண் எழுத்தாளர். நோர்வேமொழியில் எழுதுபவர். ஈழத் தமிழ் பின்னணியினைக் கொண்ட இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.
ரீட்டாநோர்வேமொழியில் எழுதிய முதலாவது நாவல் 2017ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கிறது. La meg bli med deg (Let me staywith you) என்பது இந் நாவலின் பெயர். தமிழில் ‘என்னை உன்னோடு இருக்க’ என மொழிபெயர்க்கலாம். நோர்வே நாட்டின் அக்டோபர் யு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. தனது முதலாவது நாவல் மூலமே ரீட்டா நோர்வே இலக்கிய வட்டாரங்களின் கவனத்துக்குரியவராகிவிட்டார். நோர்வேயின் முன்னணிப் பத்திரிகைகள் இந்நூல் குறித்த மதிப்பீடுகளை வெளியிட்டிருக்கின்றன.
ரீட்டாவின் நாவல் லாரா (Lara) எனும் 15 வயதுப் பெண்ணின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசுகிறது. லாரா அவளது தம்பி பீலிக்ஸ் (Felix) ஆகியோர் குடிபோதைக்கு அடிமையாகியிருந்த தமது அ