குடும்ப வன்முறை: அன்பில் ஏன் பாரபட்சம்?
பற்றிசியா ஜேனட், ஸ்காட்லாந்து, இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியிலமைந்த மேற்கு ஆக்ஸ்போர்டின் அஸ்தல் என்னுமிடத்தைச் சேர்ந்தவர். கோமகள் ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சிய வரலாற்றின் முதன்மையான பெண்களில் ஒருவர். இங்கிலாந்து மகாராணியின் ஆலோசகர்களில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதலாவது ஆலோசகர் இவர்தான். அவருடைய கடமை உணர்வின் தாற்பரியம் பலரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியது. அவருடைய பணித்தொடர்கள் அனைவரையும் அதிசயிக்க வைத்தன. 1999ஆம் ஆண்டில் டோனி பிளேயரின் அரசாங்கத்தில் முதலாவது கறுப்பினப் பெண் அமைச்சராக அங்கம் வகித்தவர்; 2007ஆம் ஆண்டில், 1315க்குப் பின்னர் வந்த முதல் பெண் சட்டத்துறை ஆளுநர் என்ற பெருமையையும் தேடிக்கொண்டவர்.
எது எப்படி இருப்பினும் குடும்ப வன்முறையை, அதன் வளர்நிலைப் படிமுறையை அடியோடு அழித்தொழிப்பது என்பதே அவர் மிகவும் உறுதியாகப் பற்றிக்கொண்ட முதன்மையான செயல்முறையாகும்.
இவ்