ஆர்.பி. பாஸ்கரன் 80
ஆர்.பி. பாஸ்கரனுடன் முலா பென் ஹைம், டெல் அவிவ், இஸ்ரேல் 1967
தமிழ் நவீன இலக்கியச் சூழலிலும் சிறுபத்திரிகை இயக்கத்திலும் 1970-80கள் புத்துயிர்ப்புப் பெற்ற காலப்பகுதியாக இருந்தன. புதுக் கவிதை நிலைபெற்றதும் மாற்றுப் பதிப்பகங்கள் உருவானதும் விதம்விதமான சிற்றேடுகள் வெளியானதும் இக்காலப் பகுதியில்தான். இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் இலக்கியத்தைத் தாண்டித் திரைப்படம், இசை, ஓவியம் போன்ற பிற கலைகள்மீது அக்கறை காட்டியதும் உறவுகொண்டதும் அப்போதுதான். அதில் குறிப்பிடத் தகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது ஓவியக் கலை. நவீன எழுத்து, நவீன ஓவியக் கலையுடன் பிணைப்புக் கொண்டது. நவீன எழுத்தாளர்களும் நவீன ஓவியர்களும் கலந்துறவாடினர்.
<img alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-270/18.jpg"