
ஆன்லைன்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
அப்பா… தாத்தா முகக் கவசம் இல்லாமல் வெளியே போறார். மாடிப்படிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த பதினொரு வயது சுகானி தந்தை சுமீத்தைப் பார்த்துச் சத்தமாகக் கத்தினாள். கணினி அறையில் வேலையாக இருந்த சுமீத் வெளியே எட்டிப் பார்த்தார்.
அப்பா… எதற்காக வெளியில் போகிறீர்கள்?
நாள் முழுவதும் அறைக்குள் தனிமையில் அடைந்து கிடப்பது மிகவும் சலிப்பாக இருக்கிறது. பக்கத்துப் பூங்காவரை போய்விட்டு வருகிறேன்.
ஏன் அறைக்குள் சும்மாவே இருக்கணும். கணினியில் ஒரு நபர் சீட்டாட்டம் ஆட வேண்டியதுதானே?
ஜோடி இல்லாமல், உடன் ஆட்கள் உட்காராமல் எப்படித்தான் சீட்டாட்டம் விளையாடுகிறார்களோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சுகானி வேகமாக ஓடிவந்து தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு, வாங்க தாத்தா, நான் சொல்லித் தருகிறேன் என்றாள்.