ஜுன் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      அமையுமா தேசிய அரசு?
      கண்டிராசன் கதை
      பள்ளிக்குள் ஊடுருவும் வன்முறை
      பள்ளிகளில் வன்முறை தீர்வு என்ன?
      பெருமரங்களும் புதிய செடிகளும் தமிழ்.விக்கி சர்ச்சைகளை முன்வைத்து ஓர் அலசல்
      வானமாமது
      கைமணலின் ஈரம்
      சல்மாவின் கதைகள்: உள்ளிருந்து விலகும் திரை
    • கதை
      அவுரி
      குட்டி இளவரசனைச் சந்தித்த குழந்தைகள்
      ஆன்லைன்
    • நினைவு
      எஞ்சிய சொற்கள்
    • துணைத்தலையங்கம்
      தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதீதமான எதிர்வினை
    • அஞ்சலி: யூசோப் காஜா
      யானைகளின் கலைஞன்
    • கண்ணோட்டம்
      பின்னை இட்ட தீ
    • எதிர்வினை
      சாமிநாதனும் சிவகுருநாதனும் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம்
    • மதிப்புரை
      மக்களுக்கான அரசியலின் சினிமா
      காலம் அளந்த நாவல்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      எதிரிக்கு உதவும் கலை
    • அறிமுகம்
      ஆர்.பி. பாஸ்கரன் 80
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜுன் 2022 மதிப்புரை மக்களுக்கான அரசியலின் சினிமா

மக்களுக்கான அரசியலின் சினிமா

மதிப்புரை
அம்ஷன் குமார்

 

‘எதிர் அரசியல் சினிமா’ 
ரதன் 

நிழல் பதிப்பகம் 
31/48, இராணி அண்ணா நகர், 
கே.கே.நகர்,  சென்னை - 600078  
செல்: 9003144868. 
பக்.176   ரூ.150

 

சினிமாவைப்பற்றித் தொடர்ந்து அக்கறையுடன் நெடுங்காலமாக எழுதிவரும் ஈழத்தமிழ் சினிமா விமர்சகர்களும் ஆய்வாளர்களுமான கே.எஸ். சிவகுமாரன், அ. யேசுராசா, ஜி.ரி.கேதாரநாதன் ஆகியோரின் எழுத்துகளிலிருந்து கனடா வாழ் ஈழத்தமிழர் ரதனின் எழுத்துகள் மிகவும் வித்தியாசமானவை. ரதன் முழுக்கமுழுக்க அரசியல் சினிமாவின்மீது தனது கண்ணோட்டங்களைப் பதிக்கிறார். அவருடைய சொந்த அனுபவங்கள் அவரின் சினிமா பார்வையையும் பாதித்துள்ளன. மான்ட்ரியல் நகரை வந்தடைந்த ஆரம்ப நாளில் தகுந்த குளிர்கால ஆடைகளின்றிச் சிரமப்பட்டபோது பிரதிபலன் எதிர்பாராது ஒரு கறுப்பினத் தம்பதியர் தொப்பியை அவருக்கு அளித்ததோடு மட்டுமின்றி அவர் மேற்கொள்ள வேண்டிய பயணத்தையும் ஆற்றுப்படுத்தினர். அதுவும் இன்னபிற கறுப்பர்களின் நட்பார்ந்த செயலும் அவரை கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஒரு கறுப்பராகவே தன்னையும் எண்ணிக்கொள்ளுமாறு செய்தது.

ரதன் ஏற்கெனவே ‘எதிர் சினிமா’ (காலச்சுவடு பதிப்பகம் 2014) என்கிற பெயரில் அரசியல் சினிமாவை ஆய்ந்து எழுதியுள்ளார். புத்தகத்தின் தலைப்பிலும் அரசியல் என்கிற சொல் இடம்பெற வேண்டுமென்று கருதியோ என்னவோ அடுத்தாற்போல் எழுதிய தனது கட்டுரைகளை ‘எதிர் அரசியல் சினிமா’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே ஒடுக்கப்பட்டவர்களைப்பற்றி அவர்களது கோணங்களிலிருந்து தரப்பட்டுள்ளவை. கறுப்பர்களைப் பற்றிய படங்கள் அனைத்துமே ஒரேவிதமான கதையாடலைக் கொண்டிருக்கவில்லை. அவை ஒவ்வொன்றும் கறுப்பர் வாழ்வின் வெவ்வேறான காலகட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. ‘டுவல் இயர்ஸ் எ ஸ்லேவ்’ ஒரு வயலின் இசைக் கலைஞரை அடிமையாக விற்றதைப் பற்றிய படம். அப்போது அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியிருந்தது. ஆனால் கறாராக அமல்படுத்தப்படவில்லை. அப்படம் ஓர் உண்மைக்கதை. அது மட்டுமல்ல, கொடுமைக்குள்ளானவர்களின் கதைகள் யாவுமே உண்மைக்கதைகள்தாம். ‘10000 ப்ளாக் மென் நேம்ட் ஜார்ஜ்’என்கிற படம் ரயில் நிறுவனத்தில் கறுப்பர்கள் உழைப்பு என்கிற பெயரில் பிழிந்தெடுக்கப்பட்ட கதையைச் சொல்கிறது. கறுப்பர்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர் ஸ்பைக் லீ. ஸ்பைக் லீயின் படங்கள் பற்றிய சிறிய ஆனால் ஆழமான கட்டுரை இதில் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பனவாகவே பல அரசியல் படங்கள் உருவாகியுள்ளன. எவரும் தவறவிடக்கூடாத பாட்ரிசியா குஸ்மானின் ‘த பேட்டில் ஆப் சிலிம், பப்லோ லரைனின் படங்கள் பற்றிய விரிவான கட்டுரையும் இதில் உள்ளது.

பிற நாட்டுப் படங்களுடன் தமிழ், ஈழப்படங்கள் பற்றியும் ரதன் எழுதியுள்ளார். தமிழின் முக்கிய சினிமா ஆய்வாளரும் ஆவணப்பட இயக்குநருமான பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரனின் முதல் திரைப்படம் ‘கட்டுமரம்’. சுனாமி சேதம் விளைவித்த கிராமப் பின்னணியில் தற்பாலியப் பெண்களின் காதல் அதிர்ச்சிக்குரியதாக மற்றவர்களால் கருதப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதில் தெளிவுறுவதாகப் படம் காட்டுகிறது. சமீப வருடங்களில் வெளிவந்த முக்கிய சுயாதீனப் படம் ‘கட்டுமரம்’. சதா பிரவணன் இயக்கிய ‘ஒரு போராளிக்கு இட்ட பெயர்’ குறும் படத்தை அதற்கான நிலைக்களனுடன் முன்னிறுத்தி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். போரில் கொடுமைகளுக்குள்ளானவர்கள் மட்டுமின்றிப் போர்க் குற்றமிழைப்பவர்களும் நிர்ப்பந்தத்தால் அவற்றைச் செய்பவர்களாக உள்ளதைப் படம் காட்டுகிறது. சதா பிரவணன் இயக்கிய மற்றொரு முக்கியமான படம் ‘பிரைடே அண்ட் பிரைடே’. தமிழ் சுயாதீனப் படங்கள் உலக அரங்கினை எட்ட வேண்டுமெனில் அவை சிறந்த தொழில்நுட்பம் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

கனடியத் தமிழர் லெனின் சிவம் கவனம் பெற்ற ஓர் இயக்குநர். அவரது ‘எ கன் அண்ட் எ ரிங்’ சர்வதேசத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டது. ஈழப் படுகொலையைப் போன்றே சூடான் நாட்டிலும் உயிர் இழப்புகள் அதிகம். இரு நாட்டு மக்களின் அவல நிலையையும் ஒப்பிடும் லெனின் அவர்களைத் திருமணத்தில் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏன் கருதுகிறார் என ரதன் கேள்வி எழுப்புகிறார்.

சிங்களப் படங்களின் அரசியலையும் ரதன் ஆய்கிறார். அவரைக் கவர்ந்த கலைஞர் பிரசன்ன விதானகே. பிரசன்னாவின் படங்கள் தமிழ் மக்களின் பாடுகள் பற்றி மட்டுமின்றி அவர்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும் சிங்களவர்களின் உளவியலையும் வெளிப்படுத்துகின்றன. பிரசன்னாவின் ‘வித் யு வித் அவுட் யு’, ‘ஆவணி வெய்யில்’ போன்ற படங்களில் அவர் ஒரு நேர்மைமிக்க கலைஞராக வெளிப்படுகிறார் என்கிறார் ரதன்.

ரதன் சுயாதீனத் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் குறிப்பிடத்தக்க தமிழ் சினிமா விமர்சகர்களில் ஒருவர். தியேட்டர் வாசலை மிதிக்கும் திரைப்படங்கள்தாம் மக்களின் திரைப்படங்கள் என்று மயங்கி மாற்றுத்திரைகளைத் தேடிச்செல்லும் படங்களை அறவே ஒதுக்கிவிடும் விமர்சகர்கள் இங்கு நிறைய உள்ளனர். தியேட்டர் வணிக விநியோகத்தில் செயல்படும் அரசியல் புரிதலற்ற இவர்களில் சிலர் சிறுபத்திரிகைக் கலாச்சார அரசியலை ஏற்றிருப்பது ஒரு நகை முரணேயன்றி வேறென்ன? ரதன் எழுதியுள்ள கட்டுரைகளில் குறிப்பிடப்படும் பல படங்கள் அடக்கு முறைக்குள்ளானவை; சொந்த நாட்டிலேயே திரையிட அனுமதி மறுக்கப்பட்டவை. புலம் பெயர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படங்கள்; சிறப்பிற்குரியனவாக இருந்தாலும் திரையிடல் வாய்ப்பற்றவையாயும் பேசப்படாமலும் உள்ளன. அவற்றின்மீது கவனத்தை ஈர்க்குமாறு செய்வது சினிமா விமர்சகரின் தலையாயப் பணி.

ரதனின் ‘எதிர் அரசியல் சினிமா’ செம்மையான இடது அரசியல் பார்வையைக் கொண்டுள்ளது.

                 மின்னஞ்சல்: amshankumar@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.