தலையங்கம்
ஆசிரியர் குழு

தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை 2024ஐ அண்மையில் வெளியிட்டுள்ளது. நூலக நிர்வாக நடைமுறைகள், நிதி ஒதுக்கீடு சார்ந்தவையும் நூல் கொள்முதல், நூல்களின் தரம் இவை சார்ந்தவையுமான வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன. இதுபோன்ற ஒரு விரிவான கொள்கை அறிக்கையை நூலக இயக்கம் வெளியிடுவ

கவிதை
பா. திருச்செந்தாழை

ஓவியம்: எம்.எஃப். ஹுஸைன்   அவர்கள் பார்த்தபடி இருக்கிறார்கள் இருளுக்குள் மூழ்கும் எவற்றுக்கும் பெயர்கள் அழிவதை. ஆட்களற்றுப் போய்விட்ட ஓட்டுவீடுகளின் சருகுகள் அலையும் தெருமுனையில் அந்தியின் போதத்தை அவர்களோடு சேர்ந்து பருகும்விதம் எங்கிருந்தோ கிளம்பிவந்து நிற்கின்றன நாடோடிக் குத

எதிர்வினை
விஜயகுமார்

மார்ச் இதழின் தலையங்கம் ‘பணமில்லாமல் பணியில்லை’ சமகால உயர்கல்வித்துறையின் அவல நிலையை மிகச்சிறப்பாகத் தீட்டியிருக்கிறதைக் குற்றம் சுமத்துவதாக அல்லாமல், பயனாளர்களாகிய மாணவர்களின் இடத்திலிருந்து நோக்கி, இச்சீரழிவு தொடர்ந்தால் அது சமூக நீதிக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் எத்தகைய பாதிப்

கட்டுரை
பெருமாள்முருகன்

பள்ளிக் கல்வி தொடர்பாக முகநூலில் பதிவுகள் இட்டார் என்பதாலும் கட்டுரைகள் எழுதினார் என்பதாலும் அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேசுவரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் அவர் பணிபுரிவதால் பள்ளிக் கல்வித்துறைத் திட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், ஆசிரியர்களின் பிரச்சி

திரை
கார்த்திக் ராமச்சந்திரன்

நேரடி மலையாளப் படமான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, மொழி மாற்றம் செய்யப்படாமல் தமிழகத்தில் குறைந்த அளவிலான திரையரங்கு களிலேயே தொடக்கத்தில் வெளியானது. ஆனால் மிகக்குறைந்த நாட்களில் தமிழகமெங்கும் அதிகப்படியான திரையரங்கக் காட்சிகளைப் பெற்றுள்ளது. திரைப்படம் தொடர்பான நேரடி விளம்பரமில்லாமல் பார்வையாளர்க

கட்டுரை
அரவிந்தன்

படஉதவி: டி.எம். கிருஷ்ணா முகநூல் டி. எம். கிருஷ்ணாவின் இசையை அவ்வப்போது கேட்பதுண்டு என்றாலும் அவரிடம் பேச வேண்டும், சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. அந்த எண்ணத்தை ஏற்படுத்தியது அவருடைய எழுத்து. கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கு முன்பு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இணை

கட்டுரை
ஸ்ரீதர் சுப்ரமணியம்

பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது, எனவே அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததிலிருந்து இது தேசிய அளவில் பேசுபொருளாக ஆகிவருகிறது. காரணம், இதில் பாதுகாப்பான ஊழலுக்குப் பெரும் வசதி வாய்ப்புகளை அரசே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனும் உச்ச நீதிமன்றத்தின்

அஞ்சலி: ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
ரியாஸ் கோமு

அச்சுதன் ராமச்சந்திரன் நாயர் வாழ்ந்த நகரமான திருவனந்தபுரத்திற்கு பிப்ரவரி 10ஆம் தேதி  சென்றிருந்தபோது அவர் காலமான செய்தியை அறிந்தேன். ‘க ஃபெஸ்ட்’ என்னும் கலை விழாவில் ‘பாதுகாக்கப்பட்ட அறியாமையும் இந்தியக் கலையும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் அலோனுடன் உரையாடல் நிகழ்த்து வத

அஞ்சலி: குமார் சஹானி (1940-2024)
எஸ். ஆனந்த்

இந்திய திரைப்படக் கலையின் தரம் உயர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சமீபத்தில் மறைந்த குமார் சஹானி அவர்களில் ஒருவர். வெளியுலகில் அதிகம் அறியப்படாதவர். திரைப்படத்தைக் காவியமாக உருவாக்க அவர் மேற்கொண்ட நவீன உத்திகளும் முறைகளும் திரைப்படத்தின்

கட்டுரை
சுரேஷ் பிரதீப்

“இராசேந்திர சோழனின் மிகச் சிறந்த கதைகளில் பெரும்பாலானவை அவர் எழுதத் தொடங்கிய எழுபதுகளின் தொடக்கத்திலேயே வெளிவந்துவிட்டன. இடதுசாரியாகக் களச் செயwல்பாடுகளில் தீவிரமாக இயங்கத் தொடங்கிவிட்டதால் அதன் பிறகான காலங்களில் அவர் எழுதியவை குறைவு. அவற்றிலும் பெரும்பாலானவை அரசியல் பகடிக் கதைகள்.”

கவிதைகள்
ச. துரை

அம்மாவை விழுங்கும் மீன் தனக்கான மீன்களை  கையில் வாங்கினாள் அம்மா அதிலொரு  பிஞ்சு பருத்திவாலை மீன் இருந்தது  அவளால் அதை ஒதுக்க முடியவில்லை பிற மீன்களை நறுக்கிவிட்டு அதை மட்டும் குளிப்பாட்டினாள் பூப்பதித்த துண்டால் மேனி துடைத்து பவுடர் பூசினாள் பருத்திவாலை கண்சிமிட்டியது அத

கட்டுரை
சுகுமாரன்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் 2014 இல் மறைந்தார். இந்தப் பதிற்றாண்டில் மிகவும் துயரளித்த இலக்கியவாதியின் மரணம் அது. எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியின் எழுத்தாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் எழுத்தாளரின் இழப்பு.   ஒருவேளை மிகவும் ‘கொண்டாடப்பட்ட’ மரணமும் அதுவாக

கதை
யுவன் சந்திரசேகர்

ப்ரபுத்தா இறந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தபோது, ஆனந்தத்தின் உச்சியில் திளைத்துக்கொண்டிருந்தேன். காரணமற்ற மகிழ்ச்சி அல்ல; உச்சபட்ச சிகரத்தை நோக்கி முன்னேறும் மலையேறிக்கு ஒரு குட்டி முகட்டைத் தாண்டியபிறகு ஏற்படுவது போன்றது. ஆனால் முகட்டின் மறுபுறம் கிடுகிடுவென்ற சரிவு இருக்கத்தானே செய்யும். முன்னுணர

கவிதைகள்
பெரு விஷ்ணுகுமார்

ஓரெழுத்துக் காதல் கடிதம் உன்னோடு பேசத் தோன்றும்போதெல்லாம்  அண்ணாந்து பார்த்துக்கொள்வேன் வானத்தைப் பெரும் நீளமான வரைபடமாய்,  அதில் எழுதத் துவங்கிய வாக்கியமொன்றை  முடிக்கத் தெரியாத வானூர்தியாய் வழியெங்கும் மூச்சடைக்க உளறிச் செல்வேன்  எல்லை நீண்ட புகைத்தடமாய் உன்னைப் பற்

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாகச் சொல்லும்போது இரண்டு காலகட்டங்களை எதிரும் புதிருமாகப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு; இரண்டுமே சமயத் தொடர்பில் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஒன்று, ‘வடக்கே இருந்து வந்த சிரமண புறச் சமயங்களால் தமிழ் மொழியும் பண்பாடும் அழிந்தது’என்பதுபற்றி. அதாவது ச

கவிதைகள்
நெகிழன்

1. நிகர்  உறங்கி விழித்தபோது ஊர் நடுவே தலையெல்லாம் இலைகளோடும் பழங்களோடும் பறவைகளோடும் கம்பீர மரமாக நின்றேன் எனது காலடியில் ஒரு கல் இருந்தது ஜனம் பூமியில் உடல்பட விழுந்து விழுந்து அக்கல்லை வேண்டியது ஒருநாள் அது களவும் போனது அன்றிலிருந்து அம் மக்கள் என்னை மரச் சாமி மரச் சாமி என்று

கதை
லட்சுமிஹர்

ஓவியம்: ஏ. ராமச்சந்திரன் இதுவரை ஒருநாள் கூட அவர்களின் புனித நூலை வாசித்தது இல்லை. மண்டியிட்டு யாதுமாகி நிற்கும் ஒருவனிடம் தனது உயிர் பலன்களை வடியும் மெழுகில் பிரகாசிக்க எண்ணியதும் இல்லை. ஏதாகினும் முறையிட ஒருவனை இதுநாள் வரை இழந்துவிட்டோம் என்கிற சிறு வருத்தம்கூட இருந்ததில்லை. இப்படி எத்தனையோ

கட்டுரை
மயிலன் ஜி சின்னப்பன்

ஓவியம்: ஆதிமூலம் 1 தமிழ்ச் சிறுகதைகள் கடந்த நூறாண்டுகளில் வடிவரீதியாகவும் சொல்முறைரீதியாகவும் இசங்களின் இடைவெட்டுகளாலும் தவணை முறையிலேனும் புதுமைகள் கண்டிருந்தாலும், அநேகக் கதைகள் இன்றும் தொடக்கம், நடு, முடிவு என்ற அமைப்பைத்தான் தக்கவைத்திருக்கின்றன. ஆதாரக்கதை நிகழும் விதத்தில்தான் படைப்பி

கவிதைகள்
பூவிதழ் உமேஷ்

1. சிறிய வீடு  என் கைக்குள்ளே ஒரு மின்மினி இருக்கும்போது விளக்கு ஒளிரும் ஒரு சிறிய வீடு என்னிடம் இருக்கிறது.  இருட்டில் வருகிற எல்லோரையும் இவ்வீட்டிற்கு வரவேற்கிறேன். விரைவாக வாருங்கள். விளக்கு இல்லாமல் போனால் வீடே இல்லாமல் போய்விடும். 2. சூரியன் ஒரு மச்சம் மனிதர்களின் புன்னகையின் கீழ

கட்டுரை
மருதன்

‘சுதேசாபிமானம் ஒவ்வொருவருடைய மனத்திலும் உண்டென்பது உண்மையாயினும் சமயம் வாய்ந்துழி அதனை நெறிப்படுத்தி அதற்குரிய செயல்களைச் செய்ய வேண்டும். அன்றேல் சுதேசாபிமானத்தால் யாரொருவருக்கும் யாதாமொரு பயனுமிலதாம்’ என்கிறார் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936). அச்செயல்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும

விஜயா வாசகர் வட்ட விருதுகள்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில், 2024ஆம் ஆண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்கள்: எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் (ஜெயகாந்தன் விருது),  எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் (புதுமைப்பித்தன் விருது), கவிஞர் ஸ்டாலின் சரவணன் (மீரா விர

மதிப்புரை
அம்பிகை வேல்முருகு

உறவுகள் (நாவல்) நீல. பத்மநாபன் காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. ரோடு, நாகர்கோவில் - 1  பக். 400 ரூ. 490 ஒரு முற்காலப் படைப்பு கண்களில்  நீரை வரவழைக்கும் வல்லமை கொண்டதாக இருக்குமானால் அது காலத்தைத் தாண்டி வாழ்கிறது என்று அர்த்தம். நீல பத்மநாபன் எழுதிய ‘உறவுகள்’ நா

உள்ளடக்கம்